மனம் வெதும்பிய பாலிவுட் கதாநாயகி

சரியான வாய்ப்புகள் அமைந்தால் 90 வயது வரை தன்னால் நடிக்க இயலும் என்கிறார் இந்தி நடிகை அலியா பட். திரையுலகில் நடிகைகளுக்கு மட்டும் உரிய முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை என்பதே இவரது ஆதங்கமாம். அதனால்தான் நடிகைகள் ஒரு சில ஆண்டுகளிலேயே சினிமாவில் இருந்து விலக வேண்டியுள்ளது என்று வருத்தப்படுகிறார். "நடிகர்களுக்கு மட்டும் முதிர்ந்த வயது வரை நடிப்பது போன்ற கதைகளைத் தயார் செய்து கொடுக்கிறார்கள்.

ஆனால் எங்களுக்கு அப்படி அல்ல. இளம் வயது என்றால் கதாநாயகியாக நடிக்க வேண்டும். அதன் பிறகு நாயகிகளுக்கு அம்மாவாக நடிக்க வேண்டும். "நடிகைகளுக்காக வித்தியாசமான கதைகளைத் தயாரிப்பது இல்லை. வித்தியாசமான முயற்சிகளை நமது இயக்குநர்கள் மேற்கொள்வதும் இல்லை," என்கிறார் அலியா. பிரபல இந்தி இயக்குநர் மகேஷ்பட்டின் மகளான இவர் நடித்த பல படங்கள் விருதுகளைப் பெற்றுள்ளன. அலியாவும் பல விருதுகளைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் திரையுலகத்தின் போக்கு குறித்தும் நடிகைகளுக்கு உள்ள மதிப்பு குறித்தும் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் இவ்வாறு மனம் வெதும்பியுள்ளார் அலியா.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!