வில்லனுக்கு ஜோடியான ஓவியா, ‘உத்தமி’யான ஜூலி

ஏற்கெனவே படங்களில் நடித்து இருந்தாலும் 'பிக் பாஸ்' நிகழ்ச்சி மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானவர் ஓவியா. இதையடுத்துப் பட வாய்ப்பு களும் விளம்பர வாய்ப்புகளும் அவரைத் தேடி மேலும் அதிகமாக குவிந்தன. தற்போது ராகவா லாரன்சுடன் 'காஞ்சனா-3' படத்தில் நடித்து வருகிறார். மேலும் பல படங்களை ஓவியா தவிர்த்துவிட்டதாகக் கூறப்படும் நிலையில், அவர் அடுத்ததாக வில்லன் நடிகர் ஒருவருடன் நடிக்க இருக்கிறார். 'ரெமோ' படத்தில் வில்லன் வேடத்தில் நடித்தவர் அசன்பால். இவர் தமிழில் ஒரு படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இதில் இவருடைய ஜோடியாக ஓவியா நடிக்கிறார்.

அசன்பாலும் ஓவியாவும் கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே ஓவியாவுடன் 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஜூலிக்கும் பட வாய்ப்புகள், தொலைக்காட்சி வாய்ப்புகள் குவிந்தன. 'பிக் பாஸ்' நிகழ்ச்சிக்குப் பிறகு பிரபல தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளினியாக அறிமுகமானார் ஜூலி. இது தவிர 'கே7 புரொடக் ஷன்ஸ்' நிறுவனம் தயாரிக்கும் ஒரு படத்தில் ஜூலி கதாநாயகியாகவும் நடிக்க உள்ளார். இப்படத்தின் தலைப்பு அண்மையில் வெளியாகி இருக்கிறது. சமூக சேவகியாக ஜூலி நடிக்கும் இந்தப் படத்திற்கு 'உத்தமி' என்று பெயர் வைத்திருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!