பெண்களுக்கு நிறம் முக்கியம் இல்லை: ஐஸ்வர்யா ராஜேஷ்

பெண்கள் தங்களுடைய நிறம் வெண்மையாக இல்லை என்ற காரணத்தினால் வீட்டிலேயே அடங்கி ஒடுங்கிக் கிடக்கிறார்கள். அது மிகவும் தவறு. நாம் நம் திறமையை வளர்த்துக் கொண்டால் எங்கு சென்றாலும் நமக்கு வரவேற்பு கிடைக்கும் என்று கூறுகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். பளபள என்று வெள்ளைத் தோலுடன் மின்னும் பெண்கள்தான் திரைப் படங்களில் நடிக்கமுடியும் என்ற கோட்பாட்டை உடைத்தெறிந்து தன்னு டைய நடிப்புத் திறமையாலும் இயல்பான அழகாலும் திரைத்துறையில் முன்னுக்கு வந்துகொண்டு இருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

"விமானப் பணிப்பெண் வேலைக்கு ஆள் எடுப்பதுபோல்தான் தற்பொழுது திருமணத்திற்கும் பெண்ணைத் தேர்ந் தெடுக்கிறார்கள். பெண்களின் திறமை இரண்டாம்பட்சம்தான். பெண்களின் சரும நிறத்திற்குத்தான் நம் சமூகத்தில் முதல் மரியாதை கிடைக்கிறது. "நீயெல்லாம் தமிழ் திரைக்கு கதாநாயகியாக வரமுடியாது. உனக்கு கதாநாயகிக்கான அம்சம் எதுவுமே இல்லை என்று சில தயாரிப்பாளர்கள் என்னை விரட்டிவிட்டார்கள். வெள்ளை நிற கதாநாயகிகளையே தொடர்ந்து பார்த்து வந்த அவர்களுக்கு நம் மண்ணின் பாரம்பரிய நிறத்தில் இருக்கும் என்னை ஏற்றுக்கொள்வது கஷ்டமான விஷயம்தான் என்பதைப் புரிந்துகொண்டேன்.

நிறம் பற்றிய நம் எண்ணங்களின் அடிப்படையே இங்கு தப்பாக இருக்கிறது. காரணம் நம் அனைவர் மனதிலும் வெள்ளைத் தோலுக்கான 'கிரீம்' விளம்பரங்கள்தான் ஆக்கிரமித்துக் கொண்டு இருக்கின்றன. அதற்கு நானும் விதிவிலக்கு இல்லை. நானும் கல்லூரியில் படிக்கும் காலத்தில் வெள்ளையாகவேண்டும் என்று பல விதமான 'கிரீம்'களை உபயோகப் படுத்தியிருக்கிறேன். "ஒரு மாதம் பளிச்சென்று இருப்பேன். பின் மீண்டும் என்னுடைய பழைய நிறம் வந்துவிடும். நான் திரையில் நடிக்க வேண்டும் என்று நினைத்தபோது என் நிறம்தான் எனக்கு இடைஞ்சலாக இருந்தது. "அப்போதுதான் திறமை இருந்தால் இந்த நிறம் எல்லாம் ஒரு தடையே இல்லை என்பதை முதலில் என் மனதுக்கும் பிறகு சமூகத்திற்குப் புரிய வைத்தேன். "இதைத்தான் நான் மற்ற பெண் களுக்கும் சொல்கிறேன். நிறம், உடலமைப்பு பற்றியெல்லாம் கவலைப் படாதீர்கள். திறமையை மட்டும் வளர்த்துக்கொள்ளுங்கள். ஆண் களுக்கும் ஒன்று சொல்ல நினைக் கிறேன். பெண்களிடம் நிறத்தைப் பார்க்காதீர்கள்; அவர்களின் திறமையைப் பாருங்கள்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!