கதாநாயகர்களின் கார்கள்

புதுக்கார் வாங்க வேண்டும், அதில் ஊரைச் சுற்றி வர வேண்டும் எனும் ஆசை சராசரி மனிதர்கள் முதற்கொண்டு பெரும் பணக் காரர்கள் வரை கிட்டத்தட்ட அனைவருக் குமே இருக்கும். எனினும் கணிசமானோருக்கு மட்டுமே அந்த யோகம் அமைகிறது. அதிலும் விலை உயர்ந்த கார்களை வாங்குவதும், ஒன்றுக்கு மூன்றாக புதுக்கார்களை வாங்குவதும் வெகு சிலருக்கு மட்டுமே சாத்தியப்படுகிறது. சினிமா நட்சத்திரங்களின் தனிப்பட்ட விருப்பங்களை தெரிந்து கொள்வதில் ரசிகர்களுக்கு எப்போதுமே ஆர்வம் இருக் கும். அந்த வகையில் நம்முடைய நட்சத் திரங்களுக்கு என்ன வகை கார் பிடிக்கும், என்ன வகை கார்களை ஓட்டுகிறார்கள் என்பதை தெரிந்து கொள்வோம்.

ரஜினிகாந்தின் போயஸ் தோட்ட வீட்டை 'ஆடி' உட்பட பல வகை கார்கள் அலங்கரிக் கின்றன. எனினும் அண்மைக்காலமாக அவர் பிஎம்டபிள்யூ காரில்தான் பயணிக்கி றார். முன்பெல்லாம் 'பிரீமியர் பத்மினி' வகை காரை அவரே ஓட்டிச் செல்வதை சென்னைவாசிகள் ஆச்சரியமாக பார்ப்பார் கள். இருந்தாலும் ரஜினி மனதில் எப்போ துமே இடம்பிடித்திருப்பது 'அம்பாசிடர்' ரக கார் தானாம். அவரது நண்பரான கமலுக்கோ அண் மையில் சந்தையில் அறிமுகமான கார் களைப் பயன்படுத்துவதில்தான் விருப்பம் அதிகம். கமல் பயன்படுத்தாத காரே இல்லை எனலாம். அண்மைய சில தினங் களாக 'ஆடி ஏ8' செடான் ரக காரில்தான் அவர் பயணிக்கிறார்.

விஜய்யும் தீவிர கார் பிரியர். முதல் படமான 'நாளைய தீர்ப்பு' வெளிவந்த காலத்திலிருந்தே சொகுசுக் கார்களை வாங்குவதில் அவருக்கு ஆர்வம் அதிகம். கொஞ்ச தூரம்தான் செல்ல வேண்டுமென்றால் மினி கூப்பரை அவரே ஓட்டிச் செல்கிறார். யாரேனும் முக்கிய புள்ளிகளைச் சந்திக்க வேண்டுமென்றால் ரோல்ஸ் ராய்ஸில் சென்று கம்பீரமாக இறங்குவார். 'பேண்டம்' வகையைச் சார்ந்த இந்தக் காரின் விலை ஐந்து கோடியாம். நீண்டகாலமாக 'இன்னோவா'தான் பயன்படுத்திக் கொண்டிருந்தார் விஜய் சேதி. அண்மையில்தான் 'பி.எம்.டபிள்யூ 7 சீரிஸ்'க்கு மாறியிருக்கிறார். இந்தக் காரின் விலை கோடியைத் தாண்டும்.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை எளிமையாக இருசக்கர வாகனத்தில் பயணித்துக் கொண்டி ருந்தார் சிவகார்த்திகேயன். இப் போது கம்பீரமாக 'ரேஞ்ச் ரோவர்' காரில் வந்து இறங்குகிறார். "இரு சக்கர வாகனத்தில் வலம் வரத்தான் ஆசை. ஆனால் சாலையில் அடையா ளம் கண்டுபிடித்து 'செல்ஃபி' எடுக்க பலர் கூடிவிடுகிறார்கள். நம்மால் போக்கு வரத்து பாதிக்கப்படக் கூடாது என்பதால் தவிர்க்கிறேன்," என்கிறார் சிவா.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!