அறிமுக நாயகன் காளிதாஸ், மேகா ஆகாஷ் இணைந்து நடித்துள்ள படம் 'ஒரு பக்க கதைகள்'. பாலாஜி தரணீதரன் இயக்கியுள்ளார். காளிதாஸ் பிரபல மலையாள நடிகர் ஜெயராமின் வாரிசு. அனைத்துப் பணிகளும் முடிவடைந்த நிலையில், சில பிரச்சினைகளால் படம் வெளியாவதில் சிக்கல் நிலவியதாகக் கேள்வி. இந்நிலையில், இயக்குநரும் காளிதாசும் தங்களது அடுத்த படத்துக்கான பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே தனக்கான கதாபாத்திரம் கச்சிதமாக இருந்ததாக நாயகி மேகா ஆகாஷ் தெரிவித்துள்ளார். பாலாஜி தரணீதரன் அடுத்து விஜய் சேதுபதி நடிக்கும் 'சீதக்காதி'யை இயக்கி வருகிறார்.
காளிதாஸ், மேகா ஆகாஷ்