கபடி விளையாட்டையும், ஆணவக் கொலைகளையும் பின்னணியாகக் கொண்ட அதிரடிப் படமாக உருவாகி இருக்கிறது 'அருவாசண்ட'. 'சிலந்தி' படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ஆதிராஜன் இயக்கியுள்ளார். புதுமுகம் ராஜா, மாளவிகா மேனன் நாயகன், நாயகியாக நடிக்க முக்கிய கதாபாத்திரங்களில் ஆடுகளம் நரேன், சௌந்தர்ராஜா, கஞ்சா கருப்பு, சுஜாதா, இயக்குநர் மாரிமுத்து, காதல் சுகுமார் உட்பட பலர் நடித்துள்ளனர். "படத்தின் இறுதிக்காட்சி சமூக அவலங்களுக்கு சாட்டையடி கொடுக்கும் விதமாக உணர்வுப் பூர்வமாக எடுக்கப்பட்டுள்ளது.
அந்த ஒரு காட்சிக்காகவே சரண்யா பொன்வண்ணனுக்கு தேசிய விருது கிடைக்கும். கவிஞர் வைரமுத்து மூன்று அருமையான பாடல்களை எழுதியுள்ளார். இரண்டு பாடல்களை நான் எழுதியிருக்கிறேன். இசையமைப்பாளர் தரணுக்கு இந்தப் படத்தின் பாடல்கள் மீண்டும் மகுடம் சூட்டும்," என்கிறார் இயக்குநர் ஆதிராஜன்.