கடந்த சில நாட்களாகத் தீவிர ஹாக்கி பயிற்சி பெற்று வருகிறார் நடிகை டாப்சி. படப்பிடிப்பு இல்லாத சமயங்களில் இவரை விளையாட்டுத் திடல்களில் தான் அதிக நேரம் பார்க்க முடி கிறது. கையில் ஹாக்கி மட்டையுடன் அங்குமிங்குமாக ஓடிக்கொண்டும் பந்தை லாவகமாக முன்னோக்கி எடுத்துச் செல்வதுமாக பார்ப்பதற்கு அச்சு அசலாக நிஜ ஹாக்கி வீராங்கனையைப் போன்றே காட்சி தருகிறார் டாப்சி. எதற்காக இந்தப் பயிற்சி? பிரபல இந்திய ஹாக்கி வீரர் சந்தீப் சிங் வாழ்க்கையை இந்தியில் திரைப்படமாக எடுக்க உள்ளனர். படத்திற்கு 'சூர்மா' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
இதில் கதாநாயகியாக டாப்சியை ஒப்பந்தம் செய்துள்ளனராம். அதற் காகத்தான் தீவிர ஹாக்கி பயிற்சி பெற்று வருகிறார். சந்தீப் சிங் இந்திய ஹாக்கி அணியின் முன்னணி வீரர்களுள் ஒருவர். எதிரணியை ஏமாற்றி கோல் அடிப்பதில் கைதேர்ந்தவர்.