பிரபல தனியார் தொலைக்காட்சி வழங்கும் சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்றுள்ளார் நயன்தாரா. மேலும் மக்களின் மனம் கவர்ந்த நடிகை, கதாநாயகி என்ற விருதும் கிடைத்துள்ளது. இரட்டை விருதுகளால் இரட்டிப்பு மகிழ்ச்சியில் இருப்பவருக்குக் காதலரான இயக்குநர் விக்னேஷ் சிவனும் தன் பங்குக்கு கூடுதல் மகிழ்ச்சியை தந்துள்ளார். கடந்தாண்டு நயன்தாரா நடிப்பில் வெளியான 'அறம்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. படம் வெளியானபோதே நயன்தாராவுக்கு விருது நிச்சயம் என்று விமர்சகர்கள் பலரும் தெரிவித்திருந்தனர். அது இப்போது உண்மையாகி இருக்கிறது.
பலரும் நயன்தாராவுக்குப் பாராட்டு தெரிவித்து வரும் நிலையில் விக்னேஷ் சிவன் அவரை வாழ்த்திப் பதிவிட்டுள்ளார். "உன்னை நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது நயன்தாரா. இதயங்களை கொள்ளை கொள்ளும் நயன்தாரா, மேலும் பல இதயங்களை கொள்ளையடிக்க வாழ்த்துகள்!