தந்தையும் மகனும் நடிக்கும் 'சந்திரமௌலி' படத்தைப் பார்க்க ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். படம் ஜூலை மாதம் 26ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவித்திருக்கிறார் படத்தின் இயக்குநர் திரு. இந்தப் படத்தின் பாடல்களும் காட்சி விளம்பரங்களும் ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது. படத்தைப் பற்றி அதன் இயக்குநர் கூறுகையில், "நடிகர்கள் அனைவரையும் ஒன்றாக நடிக்க வைத்தது மிகவும் கடினமான வேலையாக இருந்தது.
கவுதம் கார்த்திக், வரலட்சுமி, ரெஜினா கஸாண்ட்ரா, சதீஷ் என அனைவருமே நிறைய படங்களில் நடித்துக் கொண்டிருந்தார்கள். அப்படிப்பட்ட நெருக்கடியான நிலையிலும் அவர்கள் கொடுத்த முழுமையான ஒத்துழைப்பின் காரணமாக மட்டுமே இந்தப் படத்தைக் குறித்த நேரத்தில் முடிக்க முடிந்தது. அனைவருக்கும் இந்த நேரத்தில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்," என்றார் திரு.