'ஊதா கலரு ரிப்பன்' பெண்ணாக ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் ஸ்ரீதிவ்யா. இவர் அண்மையில் நடித்த 'பெங்களூரு நாட்கள்', 'இஞ்சி இடுப்பழகி', 'பென்சில்', 'காஷ்மோரா' படங்கள் சொல்லிக்கொள்ளும்படி நல்ல வரவேற்பைப் பெறவில்லை. அதனால் அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்தன. தற்பொழுது 'ஒத்தைக்கு ஒத்த' என்ற படத்தில் மட்டும் நடித்துக்கொண்டு இருக்கிறார். கிராமத்துப் பெண் வேடத்தில் அவர் பொருத்தமாக இருந்ததால் அவருக்கு நாகரிகப் பெண் வேடங்கள் கிடைக்கவில்லை.
அதனால் தன்னுடைய 'இமேஜ்'ஜை மாற்ற விரும்பினார். முதலில் தன்னுடைய முடி அலங்காரத்தை மாற்றி, நாகரிக உடை அணிந்து நாகரிகப் பெண்ணாக படங்களை எடுத்து இணையத்தில் வெளியிட்டு இருக்கிறார். இனி அவருக்கு நகர்புறத்து நாகரிகப் பெண் வேடங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறார் ஸ்ரீதிவ்யா.