நிவேதா பெத்துராஜ் 'டிக் டிக் டிக்' படத்தில் இராணுவ அதிகாரியாக நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் பெரும்பாலான காட்சிகள் விண்வெளியில் இருப்பது போன்று எடுக்கப்பட்டவை. அதனால் இந்தப் படத்தில் நடித்த அனைவரும் விண்வெளியில் ஆகாயத்தில் மிதப்பதுபோல் காட்சிகள் இருக்கும். அதற்காக நடிகர்கள் கயிற்றில் தொங்கி காட்சிகளைப் படம்பிடித்து இருந்தார்கள். அதில் நிவேதா பெத்துராஜும் பெரும்பாலான காட்சிகளில் கயிற்றில் தொங்கியபடியே நடித்திருக்கிறார். தான் கற்ற தற்காப்புக் கலையால்தான் தன்னால் அதிக நேரம் கயிற்றில் தொங்கியபடி நடிக்க முடிந்தது என்றார் நிவேதா.
"படத்தில் என் பெயர் சுவாதி. இராணுவ அதிகாரியாக நடித்திருக்கிறேன். ஜெயம் ரவி எப்போதுமே வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிப்பவர். இந்தப் படத்தில் நான் கயிற்றில் தொங்கியது புது அனுபவமாக இருந்தது. ஆனால் ரவி அதை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளாமல் நடித்தார்.