பொதுவாக படப்பிடிப்பு இல்லையென்றால் பெரும்பாலான நடிகைகள் வெளியூர் அல்லது வெளிநாடு சென்றுவிடுவது வழக்கம். அதிலும் கோடைக்காலம் வந்துவிட்டால் கேட்கவே வேண்டாம். ஒவ்வொரு நடிகையும் ஒவ்வொரு திட்டத்துடன் வெளிநாடு செல்கிறார் கள். அந்த வகையில் இந்த ஆண்டும் கோடம்பாக்கத்து நாயகிகள் பலர் பல்வேறு நாடுகளில் விடு முறையைக் கழித்துள்ளனர். நடிகை ராய் லட்சுமிக்கு கோடைக்காலம் எப்போ துமே அமர்க்களமாக அமையும். காரணம் அவரது பிறந்தநாள் மே மாதம் தான் வருகிறது. எனவே ஏப்ரல் இறுதியிலேயே எங்கே னும் பறந்துவிடுகிறார். அந்த வகையில் இந்தாண்டு லண்டன் நகரை வலம் வந்தா ராம்.
காஜல் அகர்வாலுக் கும் இது இனிமையான கோடையாக அமைந் துள்ளது. அவரது தங்கை நிஷா தனது குடும்பத்துடன் மும்பை வந்து சென்றுள்ளார். தங்கையின் குழந்தைக்குப் பலவிதமாக ஒப்பனைகள் செய்து அழகு பார்த்திருக்கிறார் காஜல். அதுமட்டுமல்ல தங்கை மகனுடன் வீட்டுக்கு அருகில் உள்ள கோவில்களுக்கும் தினமும் சென்று வந்தாராம். இதனால் அம்மணிக்கு ரொம்பவே மகிழ்ச்சி.