கோடம்பாக்கத்தில் வேகமாக முன்னேறி வரும் இளம் நாயகிகளின் பட்டியலில் சாயிஷா சைகளுக்கு நிச்சயம் இடமுண்டு. 'வனமகன்' படத்தின் மூலம் அறிமுகமான இவர் முன்னணி நாயகர்களுடன் நடித்து வருகிறார். கார்த்தி ஜோடியாக 'கடைக்குட்டி சிங்கம்', விஜய் சேதிபதி ஜோடியாக 'ஜுங்கா', ஆர்யா ஜோடியாக 'கஜினிகாந்த்' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் ஆயிஷா.
இவற்றின் வெளியீட்டை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருப்பவர் அடுத்து கே.வி. ஆனந்த் இயக்கத்தில் சூர்யா ஜோடியாக நடிக்க இருப்பதாகத் தகவல். இதுகுறித்த பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாம். இந்நிலையில் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் சூர்யா நடனமாடிய 'சொடக்கு' பாடலுக்கு சாயிஷாவும் தற்போது நடனம் வழங்கியிருக்கிறார். அவர் விறுவிறுப்பாக நடனமாடும் காணொளிக் காட்சி ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களால் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.