குயிங்டோ: இந்தியாவும் சீனாவும் 2020ஆம் ஆண்டு வாக்கில் $100 பில்லியன் வர்த்தக இலக் கைக் கொண்டிருக்கவேண்டும் என்று இந்தியப் பிரதமருக்கு சீன அதிபர் யோசனை தெரி வித்து இருக்கிறார். இரு நாடுகளுக்கும் இடைப் பட்ட வர்த்தகப் பற்றாக்குறையைத் தணிக்கும் நோக்கத்தில் இந் தியாவில் இருந்து பாஸ்மதி அல் லாத இதர அரிசியையும் சர்க் கரையையும் இறக்குமதி செய் வது குறித்து சீனா ஆராய்ந்து வருகிறது.
சீனாவில் நடந்த ஷங்காய் ஒத்துழைப்பு நிறுவன உச்ச மாநாட்டையொட்டி சீன அதிபர் ஸி ஜின்பிங்குடன் இந்தியப் பிரதமர் மோடி பலவற்றையும் பற்றி விரிவாக விவாதித்தார். அதனையடுத்து இந்தியா வின் வெளியுறவு அமைச்சின் செயலாளர் விஜய் கோகலே செய்தியாளர்களிடம் பேசிய பொழுது இந்த வர்த்தக இலக்கு பற்றி அவர் தெரிவித்தார்.