இசைத்தொகுப்பில் நடிக்கும் பிரணிதா

இப்போதெல்லாம் முழுநீளத் திரைப்படங்களில் நடிப்பது மட்டுமல்லாமல் குறும்படங்கள், தனி இசைத்தொகுப்புகளுக்கான காணொளிப் பதிவு, விளம்பரங்கள் ஆகியவற்றிலும் நடிக்க பலரும் ஆர்வமாக உள்ளனர். நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னணி நாயகியாக வலம் வந்தாலும் குறும்படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுகிறார். சிம்பு, கௌதம் மேனன், அனிருத் என கோடம்பாக்கத்தில் பலர் தனி இசைத்தொகுப்புகளை உருவாக்கி வருகிறார்கள். இந்நிலையில் நடிகை பிரணிதாவும் அப்படியொரு தொகுப்பில் நடித்துள்ளாராம்.

இந்தியில் 'சான் கித்தன்' என்ற தலைப்பில் உருவாகியுள்ள இந்த இசைத்தொகுப்பை பிரபல இயக்குநர் சுரேஷ் திரிவேணி இயக்குகிறார். "குறும்படங்கள், தனித் தொகுப்புகள் நாம் சொல்ல நினைக்கும் கருத்துக்களை மக்களிடம் மிக எளிதாகக் கொண்டுசேர்க்கின்றன. எனவே, இவற்றில் தொடர்ந்து நடிக்க விரும்புகிறேன். இதன் மூலம் ரசிகர்களை நாம் மேலும் நெருங்க முடிகிறது என்பதையும் கவனத்தில் கொண்டுள்ளேன்," என்கிறார் பிரணிதா.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!