நயன்தாரா நடித்து வரும் படத் திற்காக இயக்குநர் விக்னேஷ் சிவன் சிறப்புப் பாடல் ஒன்றை எழுதியுள்ளார். இயக்குநர் நெல்சன் இயக்கும் 'கோலமாவு கோகிலா' படத்தில் நடித்து வருகிறார் நயன்தாரா. லைக்கா புரொடக் ஷன்ஸ் தயா ரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் 3வது பாடலை நேற்றிரவு 7 மணிக்கு அனிருத் வெளியிட்டார். 'ஒரே ஒரு' என்று தொடங்கும் இந்தப் பாடலை விக்னேஷ் சிவன் எழுதி இருக்கிறார். இயக்குநர் விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் காதலித்து வருவதாகக் கூறப்படும் நிலை யில் அவர் நயன்தாராவிற்காகப் பாடல் எழுதியிருப்பது ரசிகர் களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இயக்குநர் விக்னேஷ் சிவன், நயன்தாரா.