கார்ப் பந்தயத்தில் போட்டியிட்டு பல மாதிரியான அனுபவங்களையும் நான் பெற்றுள்ளேன். போட்டிகளில் சில முறை வென்றுள்ளேன்; பலமுறை தோற்றுள்ளேன். வெற்றி தோல்வி யைக் காட்டிலும் முக்கியமாக சவால் களைச் சந்திப்பது என்பது எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று என்று கூறியுள்ளார் நடிகை நிவேதா பெத்துராஜ். "வெற்றியும் தோல்வியும் வீர னுக்கு அழகு என்று சொல்வர். வெற்றிபெற்றபின் வீறு கொண்டு எழுவதும் தோல்வி கண்டதும் துவண்டு விடுவதும் எனது வழக்கமல்ல. என்னைப் பொறுத்தவரை வெற்றி, தோல்வி இரண்டுமே எனக்கு ஒன்றுதான். "முக்கியமாக போட்டிகளில் பங்கேற்று எதிர்கொள்ளும் சவால்களைத் திறன்பட சமாளிக்க வேண்டும் என்பதே எனது முக் கிய குறிக்கோளாக இருக்கும்.
"இதையெல்லாம் செய்யவில்லை என்றால் வாழ்க்கையில் வேறென்ன சுவாரஸ்யம் இருக்கப்போகிறது? சவால் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதேநேரத்தில் பயமும் உள்ளுக்குள் உதறும்," என்று மனம் திறந்து பேசியுள்ளார் நிவேதா பெத்துராஜ்.