'ஓவியா நடித்துள்ள படங்களுக்கு விநியோகஸ்தர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்நிலையில் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் '90 எம்.எல்.' ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இப்படத்தை அனிதா உத்தீப் இயக்கி உள்ளார். நகைச்சுவைக்கு முக்கியத்துவம் அளித்து உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாம். சிம்பு இசையமைக்கிறார். 'சக்கபோடு போடு ராஜா'வுக்குப் பிறகு அவர் இசையமைக்கும் படம் இது. விரைவில் பின்னணி இசைப்பணிகளைத் துவங்க உள்ளாராம்.
"இளையர்களைக் கவரும் வகையில் சிம்புவின் இசை இருக்கும் என்று நான் சொல்லத் தேவையில்லை. அவரது இசையில் அமைந்த பாடல்களையும் காட்சிகளையும் திரையில் காண நானும் ஆவலுடன் காத்திருக்கிறேன்," என்கிறார் ஓவியா.