'மேயாத மான்' படத்தைப் பத்து முறைக்கு மேல் பார்த்துவிட்டாராம் இசையமைப்பாளர் அனிருத். அந்தப் படத்தில் நாயகன் வைபவ் நடிப்பு தம்மை வெகுவாகக் கவர்ந்தி ருப்பதாகக் கூறியுள்ளார். வெங்கட் பிரபு தயாரிப்பில் உருவாகி உள்ளது 'ஆர்.கே. நகர்'. இப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழாவில் தான் மேற்கண்டவாறு குறிப்பிட்டார் அனிருத். இதில் வைபவ், சானா அல்தாப் ஜோடி சேர்ந்து நடித்துள்ளனர். வில்ல னாக சம்பத் நடிக்க, பிரேம்ஜி இசை யமைத்துள்ளார்.
இந்நிலையில் இதன் முன்னோட்ட வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொண்ட அனிருத், தாம் விருந்தினராக வர வில்லை என்றும் ஒரு விசிறியாக வந்திருப்பதாகவும் குறிப்பிட்டார். "நான் வைபவின் நகைச்சுவை, வசன உச்சரிப்புக்கு ரசிகன். என் நண்பர்களுக்கும் அவரைப் பிடிக்கும். 'ஆர்.கே. நகர்' பட இயக்குநர் சரவண ராஜனின் முந்தைய படமான 'வடகறி'யில் நான் ஒரு பாடலைப் பாடி இருக்கிறேன். 'இசை சுனாமி' என்ற பட்டம் பிரேம்ஜிக்குப் பொருத்தமாக இருக்கிறது. அவர் இதை தக்க வைத்துக்கொள்ள நான் பிரார்த்திப் பேன். எனக்கும் அவருக்கும் நல்ல நட்பு இருக்கிறது.
"இந்நிகழ்வுக்கு வந்துள்ள நடிகர் சிவாவிற்கும் நான் மிகப்பெரிய விசிறி. நான் திரையரங்குகளுக்குச் சென்று பார்க்கும் படங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. ரஜினி, அஜித் படங் களை முதல் நாளன்றே பார்த்து விடு வேன்.
'ஆர்கே நகர்' படத்தில் இடம்பெறும் காட்சியில் வைபவ், சானா அல்தாப்.