தமிழ்நாட்டு அரசியலில் பரபரப் பான திருப்பங்கள் ஏற்பட்டு வரும் சூழலில் முக்கிய எதிர்க்கட்சி யான திமுக மாநிலத்தில் செல் வாக்குமிக்க நடிகர் யாரையாவது தன் பக்கம் ஈர்க்கவேண்டும் என்ற கட்டாயத்திற்கு ஆளாகியிருப்ப தாகத் தெரிகிறது. பிரபல நடிகர்களான கமல் ஹாசன், ரஜினிகாந்த் இருவரும் அரசியல் பக்கம் தங்கள் பார்வை யைத் திருப்பியிருக்கும் நிலையில், இவர்களின் தாக்கத்தைச் சமாளிக் கும் முயற்சியாக நடிகர் விஜய்யை தன் பக்கம் இழுக்க திமுக வியூ கம் வகுப்பதாக அந்தக் கட்சி யினர் தெரிவிக்கிறார்கள்.
விஜய் அல்லது அவருடைய தந்தையான சந்திரசேகருக்கு நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் பதவியையும் விஜய்யின் ரசிகர் களுக்கு சட்டமன்றம் மற்றும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்குவது குறித்தும் இதன் தொடர்பில் பேச்சு நடத்தவும் திமுக மேலிடம் யோசித்து வருவ தாக அந்தக் கட்சியின் தகவல் வட்டாரங்கள் பரபரப்பாகத் தெரி வித்து வருகின்றன.