'கடைக்குட்டி சிங்கம்' படத்தின் வெளி யீட்டை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளார் பிரியா பவானி சங்கர். படத்தில் இவரது பெயர் பூங்குழலி செல்லம்மா. அழகான தமிழ்ப் பெயரைக் கொடுத்த இயக்குநருக்கு நன்றி தெரிவிப்பதாகக் குறிப்பிடும் பிரியாவுக்கு இதில் நாயகன் கார்த்தியின் மாமன் மகள் வேடம். படம் முழுவதும் "மாமா...மாமா..." என்று கார்த்தியை சுற்றிச் சுற்றி வருவாராம். சின்னத் திரையில் இருந்து சினிமாவில் கால் பதித்ததால் தனது வாழ்க்கை அடி யோடு மாறிவிட்டதாக நினைக்கவேண்டாம் என்று சிரித்தபடியே சொல்பவர், தொலைக் காட்சி தொடர்களில் நடித்தபோது குடி யிருந்த அதே வீட்டில்தான் இப்போதும் வசிப்பதாகச் சொல்கிறார்.
"இந்தப் படத்தில் நடித்தது நல்ல அனுபவம். சத்யராஜ் உட்பட பல மூத்த கலைஞர்கள் இதில் பங்களித்துள்ளனர். அனைவருமே இளையர்களுக்குப் பல நுணுக்கங்களைக் கற்றுக்கொடுத்தனர். இளையர்களைவிட மூத்தவர்கள்தான் படப்பிடிப்பின்போது ஜாலியாக இருந்தனர்," என்கிறார் பிரியா. 'மேயாத மான்' வெளியான சமயத்தில் தான் 'கடைக்குட்டி சிங்கம்' பட வாய்ப்பு இவரைத் தேடி வந்ததாம். தயாரிப்பாளரைச் சந்திக்கச் சென்றபோது இயக்குநர் பாண்டிராஜைப் பார்த்துள்ளார். "முதல் சந்திப்பிலேயே என்னையும் ஒரு நாயகியாக ஒப்பந்தம் செய்துவிட்டனர். எனினும் சாயிஷாதான் இதில் முதன்மை நாயகி என்பது எனக்கும் தெரியும். இதனால் எனது கதாபாத்திரத்துக்கு உரிய முக்கியத் துவம் கிடைக்குமா எனும் சந்தேகம் இயல்பாகவே எழுந்தது. "இதுகுறித்து இயக்குநரிடம் வெளிப் படையாகக் கேட்டேன். என்னுடைய அனைத்து சந்தேகங்களையும் அவர் தீர்த்து வைத்தபிறகே நடிக்கச் சம்மதித்தேன்.
பிரியா பவானி சங்கர்