சந்தீப்: வித்தியாசமே வெற்றியைத் தரும்

ரசிகர்களிடம் நல்ல பெயரெடுக்க வேண்டும் என்பதற்காகவே வித்தியாசமான கதைகளைத் தேர்வு செய்வதாக இளம் நாயகன் சந்தீப் கிஷன் தெரிவித்துள்ளார். கார்த்திக் நரேன் இயக்கத்தில் அரவிந்த்சாமி நாயகனாக நடிக் கும் 'நரகாசூரன்' படத்தில் இவ ரும் முக்கியமான கதாபாத்திரத் தில் நடித்திருக்கிறார். தமிழ்த் திரையுலகில் தனக்கென ஓரி டத்தைப் பிடிக்கவேண்டும் என் பதுதான் சந்தீப்பின் ஆசையாம். "தமிழில் இதுவரை நான்கு படங்களில் நடித்துவிட்டேன்.

நான்கும் வித்தியாசமான கதைக் களம் கொண்டவை. சினிமாவைப் பொறுத்தவரை அஜித், விஜய் நடிக்கும் படங்களுக்கும் எனது படத்துக்கும் திரையரங்க நுழை வுச்சீட்டு என்று வரும்போது ஒரே கட்டணம்தான் வசூலிக்கிறார்கள். "எனவே என்னைப் போன்ற வளரும் நடிகர்கள் வித்தியாசமான கதைகளைத் தேர்வு செய்தால் மட்டுமே வெற்றிபெற முடியும்," என்கிறார் சந்தீப். இவர் பிறந்தது, வளர்ந்தது, படித்தது எல்லாமே சென்னையில் தானாம். சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடியபோது தெலுங்கில் தான் முதல் வாய்ப்பு கிடைத் திருக்கிறது.

"நரகாசூரன்' பாடல்கள் காதல், சண்டை என்ற வழக் கமான படமாக இருக்காது. இந்தப் படத்தைப் பார்க்கும்போது கிடைக்கும் அனுபவம் வேறு மாதிரியாக இருக்கும். எனக்கு மட்டுமல்ல, அரவிந்த்சாமி, ஸ்ரேயா, ஆத்மிகா என அனை வருக்குமே முக்கியமான படமாக இருக்கும். ரசிகர்களுக்கு நல்ல படத்தைப் பார்த்த திருப்தி கிடைக்கும்," என்கிறார் சந்தீப்.

'நரகாசூரன்' படத்தில் இடம்பெறும் ஒரு காட்சியில் சந்தீப் கிஷன், ஆத்மிகா.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!