ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்ச் சினிமா வில் அறிமுகமான இவர் தொடக்கம் முதலே தமிழ் கற்க வேண்டும் எனும் ஆர்வத்துடன் இருந் தாராம். இந்த ஐந்தாண்டுகளில் பார்ப்பவர்களிடம் எல்லாம் தமிழிலேயே பேசி இன்று சரளமாக உரையாடும் அளவுக்கு அனுபவம் பெற்றுள்ளார் மனீஷா. "முன்பு சில பிழைகளுடன் தமிழ் பேசுவேன். இப்போது பிழையில்லாமல் தைரியமாகப் பேசுகி றேன்," என்று சிரிக்கிறார்.
தன் மனதுக்குத் திருப்தி தராத கதைகளில் மனீஷா நடிக்க விரும்புவதில்லை. வெறும் பொம் மையைப் போல் வந்து போக முடியாது என்கிறார். "இது போல் பலர் கூறியுள்ளனர். நானும் என் முந்தைய பேட்டிகளில் இப்படிக் கூறியுள்ளேன். ஆனால் அந்த நிலைப்பாட்டில் இருந்து நான் இன்றளவும் மாறவில்லை என்பதுதான் முக்கியம்.
"என்னுடைய கதாபாத்திரத்துக்கு முக்கியத்து வம் அளிக்கப்பட வேண்டும் என்பதில் பிடிவாதமாக உள்ளேன். இந்தப் பிடிவாதம் காரணமாக பல வாய்ப்புகளை நான் இழந்திருப்பது திரையுலக நண்பர்களுக்குத் தெரியும். ஆனால் அதற்காக நான் வருத்தப்படவில்லை. நான்கைந்து படங்களில் நடித்து முடிப்பதற்குள் மனீஷாவுக்கு தரமான நடிகை என்று பெயர் கிடைத்துள்ளது. "நல்ல கதை என்றால் மனீஷாவை அணுகலாம் என இளம் இயக்குநர்கள் கூட நினைக்கிறார்கள். இப்படி ஒரு நல்ல பெயரைச் சம்பாதிக்க எனது பிடிவாதக் குணம்தான் காரணம். எனவே இந்தப் பிடிவாதம் பிடித்திருக்கிறது," என்கிறார் மனிஷா.
தற்போது கதை கேட்கும் படலத்தில் ஈடுபட்டுள் ளாராம். முன்னணி கதாநாயகன் ஒருவரது படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல்.