ராஜு முருகன் இயக்கும் 'ஜிப்ஸி' படத்தில் குதிரையுடன் இந்தியா முழுவதும் பயணிக்கிறார் ஜீவா. இப்போது அவரது வழியில் விக்ராந்த் ஒரு ஒட்டகத்துடன் இந்தியா முழுவதும் பயணிக்க இருக்கிறார். 'பக்ரீத்' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் கதையை எழுதி இயக்குவதுடன் ஒளிப்பதிவும் செய்கிறார் ஜெகதீசன் சுபு. "விவசாயம் செய்யும் ஒரு நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த வாலிபன் வாழ்வில் திடீரென்று ஒரு ஒட்டகம் நுழைகிறது.
அதன்பிறகு அவனது குடும்பத்தில் நடக்கும் சம்பவங்கள், நெடுந்தூரப் பயணத்தில் அவன் சந்திக்கும் மனிதர்கள் மூலம் ஏற்படும் திருப்புமுனைகளே கதை. விக்ராந்த், வசுந்தரா நாயகன், நாயகிகளாக ஜோடி சேர, இவர்களுடன் முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர். சென்னையில் தொடங்கி ராஜஸ்தான், கோவா, மகாராஷ்டிரா போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடக்கிறது," என்கிறார் இயக்குநர் ஜெகதீசன் சுபு.