நடிப்பதில் நான் யாரையும் பார்த்து அவர்களைப் போலவே 'காப்பி' அடிப்பது இல்லை. என் வழி எப்போதுமே தனி வழி என்கிறார் விஜய் சேதுபதி. படங்களின் வெற்றி, தோல்வி யைப் பற்றி தான் அதிகம் அலட்டிக்கொள்வது இல்லை என்று கூறும் விஜய் சேதுபதி, 'நல்ல படங்களில் நடிக்க வேண் டும்; ரசிகர்களின் பாராட்டு களைப் பெறவேண்டும்' என்பது மட்டுமே தனது ஒரே இலக்கு என்று கூறியுள்ளார். இந்தக் காரணத்தினால்தான் ஒரே நேரத்தில் தன்னால் பல படங்களில் தொடர்ச்சியாக நடிக்க முடிகிறது என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
தற்போது கூட 'இடம் பொருள் ஏவல்', 'செக்கச் சிவந்த வானம்', 'இமைக்கா நொடிகள்', '96', 'சீதக்காதி' உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார். அதேபோல் ஒன்றுக்கும் மேற் பட்ட நாயகன்கள் நடிக்கும் படங் கள் என்றால் முன்னணி நடிகர் கள் சற்று தயங்குவது வழக்கம். விஜய் சேதுபதி அதைப் பற்றியும் கவலைப்படுவது இல்லை. இந்த விஷயத்தில் பல இளம் நடிகர்களுக்கு அவர் முன் உதா ரணமாகத் திகழ்கிறார் என் கின்றன கோலிவுட் வட்டாரங்கள்.