மக்கள் மத்தியில் முக்கியமான விஷயம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உருவாகி யுள்ளது 'திசை'. அறிமுக இயக்குநர் வரத ராஜன் இயக்கியுள்ளார். இவர் பாக்யராஜிடம் சினிமா பயின்றவர். "இன்று மக்கள் மத்தியில் பரவலாக உச்சரிக்கப்படும் வார்த்தை ஆர்கானிக் உணவு. சிறு தானியங்கள், செக்கு எண்ணெய்க் கடைகள் வீதிக்கு வீதி முளைத்துள்ளதை நாம் பார்க்க முடிகிறது. "ஆர்கானிக் உணவுகள் என்று சொல்லப்படுவது நல்ல, தரமான உணவுகள்தானா? எனும் கேள்வியை எழுப்பும் படம் இது. அதற்காக வெறும் பிரசாரப் படமாக இருக்காது.
"இது முக்கோணக் காதல் கதையைச் சொல்லும் படம். காத லுடன் விளைநிலங்கள் விலை நிலங்களாக மாறியதைப் பற்றியும் பேசுகிறோம். வணிக ரீதியான படங்களுக்குரிய அம்சங்களும் இடம்பெற்றிருக்கும்.