பார்வதி: அச்சத்துடன் இருக்கிறோம் மலையாளத் திரையுலகின் முன்னணி

1 mins read
f1a3c43b-210b-49f6-bcaa-3fef5da1f029
-

நடிகர்களாக இருப்பவர்களின் ரசிகர் மன்றங்கள் தற்போது குண்டர்கள் மன்றமாக மாறிவிட்டதாக நடிகை பார்வதி மேனன் சாடியுள்ளார். அத்தகைய ரசிகர்கள் மூலம் தமக்கும் மற்ற நடிகைகளுக்கும் கொலை மிரட்டல்கள் வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். "நடிகைகளின் பாதுகாப்பு கருதியே மலையாளத் திரைப்படப் பெண்கள் கூட்டமைப்பை உருவாக்கினோம். ஆனால், அமைப்பில் உள்ள நடிகைகளுக்குப் புதுப்படங்களில் நடிக்க வாய்ப்பு தராமல் ஒதுக்குகின்றனர். பாலிவுட்டில் பாலியல் புகார்களை எழுப்பி வரும் நடிகைகளுக்கு வாய்ப்பளிக்கும் சிலர் எங்களை ஒதுக்குவது வேதனை அளிக்கிறது. "கேரளாவில் கதாநாயகர்களைக் கடவுளாகப் பார்க்கின்றனர். ஆனால், அவர்களின் ரசிகர்கள் எங்களுக்குப் பாலியல் மிரட்டல்களை விடுக்கின்றனர். இதனால், தினமும் அச்சத்துடனேயே பொழுதைக் கழிக்கிறோம். நிறைய வெற்றிப் படங்களில் நடித்துள்ள போதிலும் கடந்த ஓராண்டாக எனக்கு எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை," என்று கூறியுள்ளார் பார்வதி.