சரித்திரப் படத்தில் குந்தவை நாச்சியாராகும் கீர்த்தி சுரேஷ்

பிரபல மூத்த நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றைப் படம் பிடித்துக்காட்டிய 'நடிகையர் தில கம்' படத்தில் சாவித்திரியைப் போலவே அச்சு பிறழாமல் நடித்து பலதரப்பு மக்களின் கவனத் தையும் ஈர்த்தார் இளம் நடிகை கீர்த்தி சுரேஷ்.
சாவித்திரியின் பக்குவமான, பண்பட்ட நடிப்பை வெளிப்படுத்தி யிருந்த கீர்த்தியை அனைவரும் புகழ்ந்து பாராட்டினர். இந்தப் பாராட்டுக்கு இப்போது கைமேல் பலன் கிடைத்துள்ளது.
தெலுங்கு, தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் அவரது நடிப்பு சிறப்பாக அமைந்திருந்ததை அடுத்து அவர் மீண்டும் ஒரு சரித்திரப் படத்தில் நடிப்பதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கல்கியின் 'பொன்னியின் செல்வன்' நாவலைத் திரைப்படமாக எடுக்க இயக்குநர் மணிரத்னம் முடிவு செய்துள்ளார். பல ஆண்டு களாகவே இந்த நாவலைத் திரைப் படமாக எடுப்பதற்கு பல முக்கிய பிரபலங்களும் முயன்று அது கைவிடப்பட்டது. தற்போது மணி ரத்னம் இதை கையில் எடுத் துள்ளார்.
'பொன்னியின் செல்வன்' படத்தின் மிக முக்கிய பாத்திரமான குந்தவை நாச்சியார் வேடத்தில் நடிப்பதற்கு கீர்த்தி சுரேஷ் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.
இப்படத்தின் மற்ற முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க அமி தாப் பச்சன், ஜெயம்ரவி, ஐஸ்வர்யா ராய், விக்ரம், கார்த்தி, மோகன்பாபு எனத் தற்போது நடிகர், நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது.
மணிரத்னம் தனது கனவு படமான 'பொன்னியின் செல்வன்' படத்தை லைகா நிறுவனத்துடன் இணைந்து 200 கோடியில் எடுக்க உள்ளார். இப்படம் குறித்த அதி காரபூர்வ அறிவிப்பையும் நடிகர் நடிகைகள் குறித்த தகவலையும் விரைவில் படக்குழு வெளியிடும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!