தரமான படங்கள் தந்த இயக்குநர் மகேந்திரனுக்கு இறுதி அஞ்சலி

காலத்தால் அழியாத படைப்புக் களைத் தந்துள்ள இயக்குநர் மகேந்திரன் உடல்நலக் குறைவு காரணமாக தமது 79ஆவது வயதில் நேற்று சென்னையில் காலமானார்.
சிறுநீரகக் கோளாறு காரணமாக அவதிப்பட்டு வந்தார் மகேந் திரன். இந்நிலையில் கடந்த ஒரு வார காலமாக அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருந்தது. சிகிச்சை பலனளிக்காமல் நேற்று அவர் காலமானார்.
1978ஆம் ஆண்டு 'முள்ளும் மலரும்' படத்தின் மூலமாக தமிழ்த் திரையுலகிற்கு இயக்குநராக அறிமுகமானவர் மகேந்திரன். அதனைத் தொடர்ந்து 'உதிரிப்பூக் கள்', 'ஜானி', 'நெஞ்சத்தைக் கிள்ளாதே', 'கைக் கொடுக்கும் கை' எனப் பல வெற்றிப் படங்களை இயக்கியுள்ளார்.
சில படங்களுக்குக் கதையும் எழுதியுள்ளார் மகேந்திரன். அண்மைக் காலமாக சில படங்களில் நடித்தும் வந்தார்.
தெறி, நிமிர், 'சீதக்காதி', 'பேட்ட' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது கரு.பழனி யப்பன் இயக்கிவரும் 'புகழேந்தி எனும் நான்' படத்தில், அருள்நிதி யுடன் நடித்து வந்த மகேந்திரன் காலமானதை அடுத்து ஏராளமா னோர் இரங்கல் செய்தி வெளியிட் டுள்ளனர்.
"இயக்குநர் மகேந்திரன் மறை வுக்கு நவீன சினிமா கண்ணீர் சிந்துகிறது. செயற்கை நாடகத் தன்மை கொண்ட தமிழ்த் திரைப் படங்களைச் செவ்வியல் தன் மைக்கு உயர்த்திக் காட்டிய இயக் குநர்களில் உன்னதமானவர் மகேந்திரன்," எனக் கவிஞர் வைர முத்துத் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி யில், மகேந்திரனை யதார்த்த சினிமா இயக்குநர் என்று குறிப் பிட்டுள்ளார்.
"வாழ்நாள் முழுவதும் எளி மைக்கு இலக்கணமாக விளங்கிய வர். மகேந்திரனின் கதை, வசனம் எழுதிய 'முள்ளும் மலரும்' திரைப் படம் என்றைக்கும் அண்ணன் தங்கை பாசத்துக்கு அடையாள மாகவும் அத்தாட்சியாகவும் திகழ் வதை நாம் காண்கிறோம்," என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மகேந்திரன் இயக்கிய 'நெஞ் சத்தைக் கிள்ளாதே' திரைப்படம் மூன்று தேசிய விருதுகளைப் பெற்றுள்ளது.
ஒருமுறை உங்களுக்குப் பிடித்த இயக்குநர் யார்? என்று ரஜினியிடம் அவரது குருநாதரான இயக்குநர் பாலசந்தர் கேள்வி எழுப்பியபோது, சற்றும் யோசிக் காமல், "மகேந்திரன்" என்று பதில ளித்தார் ரஜினி.
ரஜினியின் திரைப்பயணத்தில் முக்கிய மைல் கற்களாக மகேந்திர னின் படங்கள் இடம்பெற்றுள்ளன.
எனக்குள் இன்னொரு ரஜினி இருக்கிறார் என்பதைக் காட்டியவர் இயக்குநர் மகேந்திரன் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
நேற்று மகேந்திரனுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனக்கும் அவருக்கும் இடையே யான நட்புச் சினிமாவைக் கடந்து மிக ஆழமானது என்றார் ரஜினி.
"அண்மையில் 'பேட்ட' படப் பிடிப்பில் நீண்ட நேரம் பேசினோம். இன்றைய சமுதாயத்தின் மீதும், அண்மைய சினிமா மீதும், அரசியல் மீதும் அவருக்கு மிகுந்த அதிருப்தி, கோபம் இருந்தது.
"அவர் எந்தச் சூழ்நிலையிலும் தனது சுயமரியாதையை விட்டுக் கொடுக்காதவர்," என்று ரஜினி மேலும் தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!