சுடச் சுடச் செய்திகள்

‘படம் பிடிப்பவருக்கும் எனக்கும் உறவில்லை’

நடிகைகள் நடிப்புலகில் காலடி எடுத்து வைக்கத் தொடங்கியதுமே அவர்கள் புகழ்பெற்று உச்சம் தொடுகிறார்களோ இல்லையோ, அவர்களைப் பற்றிய கிசுகிசுக்கள் நாளும் திரைவானில் பறக்கத் தொடங்கிவிடும். நடிகைக்கு இயக்குநருடன், தயாரிப்பாளருடன், சக நடிகருடன் தொடர்பு என வதந்திகளும் கூடை கூடையாய் பரவத் தொடங்கிவிடும். 
இந்த தகவல்களைப் படித்து சில நடிகைகள் கோபப்படுவதும், சில நடிகைகள் அதை ரசித்து சிரித்துக்கொள்வதும், ஒருசிலர் வதந்தி பரப்பு பவர்கள் மீது வழக்கு தொடர்வதும் உண்டு. 
இப்போது நிக்கி கல்ராணியின் திரைவானிலும் அதுபோல் ஒரு கருமேகம் சூழ்ந்துள்ளது. 
“கதாநாயகிகள் பலரும் தங்களை அழகாகக் காட்டுவதற்காக புகைப்படக்காரருடன் தொடர்பு வைத்திருப்பார்கள்? அதுபோல் நீங்களும் தொடர்பு வைத்திருக்கிறீர்களா?” என்று ஊடகத் திரைச் செய்தியாளர்கள் கேள்வி கேட்டுள்ளனர்.   
இந்தக் கேள்விக்கு பதிலளித்த நிக்கி கல்ராணி, “எனக்கும் என்னைப் படம்பிடிக்கும் புகைப்படக்காரருக்கும் இடையே எந்தத் தொடர் பும் இல்லை. அவர் வேலையை அவர் பார்க்கிறார். என் வேலையை நான் பார்க்கிறேன். அத்துடன் எங்களின் பணி முடிந்தது.  
“ஒருவர் என்னை அழகாகப் படம்பிடிக்கிறார் என்பதற்காக அவர் என்னை விரும்புகிறார் என்றோ, அவருக்கும் எனக்கும் தொடர்பு என்றோ, உறவு என்றோ கூறுவதில் எந்த அர்த்த மும் இல்லை,” என்று கூறியுள்ளார்.  
‘சார்லின் சாப்ளின் 2’ படத்தைத் தொடர்ந்து நிக்கி கல்ராணியின் நடிப்பில் தற்போது ‘கீ’ திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் ஜீவாவின் ஜோடியாக அவர் நடித்துள்ளார். 
காலீஸ் இயக்கியுள்ள இப்படம் ஏப்ரல் 12ஆம் தேதி வெளிவர உள்ளது. 
இந்நிலையில், நிக்கி கல்ராணி தமிழக ஊடகத்திற்கு பேட்டி அளித்துள்ளார். 
“கீ’ என்று படத்தின் தலைப்பைக் கேட்ட வுடன் பூட்டுக்குத் தேவைப்படும் சாவிதான் உடனே என் நினைவிற்கு வந்தது. ஆனால், நீங் கள் நினைக்கும் ‘கீ’ இதுவல்ல என்றார் இயக்குநர். நாம் எந்தச் செயலைச் செய்தாலும் அதில் நல்லதும் இருக்கும், கெட்டதும் இருக் கும். அந்தக் கெட்டதிலும் ஒரு நல்லதும் நடக்கும். அதுதான் இந்தக் ‘கீ’ படத்துக்கு அர்த்தம் என்றார். கதையைக் கேட்டவுடன் தலைப் புக்கான அர்த்தம் புரிந்தது.
“நான் இந்தப் படத்தில் தியா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். 
“கீ’ படம் நானும் ஜீவாவும் நடித்த முதல் படம். இப்படத்தில் ஜீவாவின் ஜோடியாக  நடித்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.  ஆனால், ‘கலகலப்பு 2’ முதலில் வெளியீடா னது. நாங்கள் இருவரும் துறுதுறு வென்று இருப்போம். படப்பிடிப்பில் சண்டைபோட்டுக் கொண்டே, ஜாலியாக பலரையும் கலாய்த்துக் கொண்டே இருப்போம். எங்க ளிடம் இயக்குநர்தான் மிகவும் சிக்கித் தவித்தார். படப்பிடிப்பில் அவ்வளவு ஜாலியாக இருக்கும்.
“இயக்குநர் காலீஸ் புது இயக்குநர். மிகவும் பொறுப்புடன் இந்தக் கதையைத் தேர்ந்தெடுத் துச் சிறப்பாக இயக்கி இருக்கிறார். 
“படத்தில் விஷால் சந்திரசேகர் இசை யமைத்திருக்கிறார். எனக்கும் ஜீவாவிற்கும் ஒரு காதல் பாடல் இருக்கிறது. அதுதான் எனக்கு மிகவும் பிடித்த பாடல். மற்ற பாடல் களும் அனைவருக்கும் பிடிக்கும். கிளைமாக்ஸ் காட்சியில் இடம்பெறும் பின்னணி இசையைச் சிறப்பாக கொடுத்திருக்கிறார். 
“இந்தப் படம் எல்லாத் தரப்பு மக்களுக்கும் பிடிக்கும். 4 வயது குழந்தை முதல் 70 வயது பெரியவர்கள் வரை கைபேசி வைத்திருக் கிறார்கள். இப்படம் தற்போதைய காலக்கட்டத் திற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் படமாக இருக்கும் என்று சொல்லலாம்,” என்று நிக்கி கல்ராணி கூறியுள்ளார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon