‘சூர்யா ஒரு மனிதாபிமானி’

அரசியல் என்பது அனைவருக்குமான தளம் என்றும், படித்தவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்றும் 'என்ஜிகே'வில் ஆணித் தரமாகச் சொல்லியிருக்கிறாராம் இயக்குநர் செல்வராகவன். அதற்காக இது முழுநீள அரசில் படம் எனும் முடிவுக்கு வந்துவிட வேண்டாம் என்கிறார்.

சூர்யா நாயகனாக நடித்துள்ள இப் படத்தில் ரகுல் பிரீத்சிங், சாய் பல்லவி என இரு நாயகிகள் உள்ளனர்.

"மீண்டும் கார்த்தியுடன் ஏன் இணைய வில்லை என்று பலரும் கேட்கிறார்கள். அதற்கான வாய்ப்பு அமையும் போது அது நடக்கும்.

" சூர்யா சாருடன் இணைந்து பணி யாற்ற வேண்டும் என்பது எனது நீண்ட நாள் விருப் பம். அதற்கான நேரம் இப்போது தான் கனிந்தது.

"அவருக்குப் பொருத்தமான கதை அமைந்த தும் உடனே தொடர்பு கொண்டேன். அவருக்கும் கதை பிடித்தி ருந்தது. எனது முந்தைய படங்க ளில் காதல், ரவுடி கும்பல் என்று பல விஷயங்களைக் கொட்டியிருக்கிறேன்.

"எனவே இதுவரை கையாளாத கதைக் களத்தை அமைக்க விரும்பினேன். அப் போது தான் ஓர் இயக்கு நராக எனக்குத் திருப்தி கிடைக்கும்.

"இது முழுக்க முழுக்க அரசியல் படம் என்று சொல்லிவிட முடியாது. அரசியல் குறித்த என்னுடைய பார்வையைப் பதிவு செய்துள்ளேன்," என்கிறார் செல்வ ராகவன்.

முன்னோட்டக் காட்சிகளைப் பார்த்தவர்கள் முழுநீள அரசியல் படம் எடுத்திருக்கிறீர்களா என்று ஆச்சரியத்துடன் விசாரித்தனராம். இதில் அரசியல், திகில், பொழுதுபோக்கு அம்சங்கள் என அனைத்தும் இருக்கும் என்பதே செல்வா தரும் பதில்.

"சூர்யாவைப் பொறுத்தவரை மிகத் திறமை யான நடிகர் மட்டுமல்ல, நல்ல மனிதாபிமானி. தன்னைச் சுற்றியிருக்கும் அத்தனைப் பேரையும் மிகப் பொறுப்பாக, கனிவாகப் பார்த்துக் கொள்வார். அவருடன் படப்பிடிப்பு தளத்தில் இருக்கும்போது மனதில் ஒருவித மகிழ்ச்சி, உற்சாகம் துளிர்க்கும். அவர் இயக்குநருக்கான ஒரு நடிகர்.

"அதன் காரணமாகவே அவருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் எனும் விருப்பம் அனைத்து இயக்குநர்களுக்கும் இருக்கும். எனக்கும் அந்தக் கனவு இருந்தது. அது தற்போது நனவாகி உள்ளது," என்கிறார் செல்வா.

ஒவ்வொரு காட்சியிலும் சூர்யா மிகவும் மெனக்கெட்டு நடித்ததாகக் குறிப்பிடுபவர், இயக்குநருக்குத் திருப்தி ஏற்படும் வரை அடுத்த காட்சி குறித்துப் பேசாத சூர்யாவின் தன்மை தம்மை வெகுவாகக் கவர்ந்தது என்கிறார்.

இந்நிலையில் நடிகர் சந்தானத்தை நாயகனாக வைத்துத் தொடங்கிய 'மன்னவன் வந்தானடி' படத்தின் வேலைகள் மீண்டும் தொடங்கும் என எதிர்பார்ப்பதாகச் சொல்கிறார் செல்வா.

"எனக்கு எப்போதுமே சந்தானத்தை ரொம்பப் பிடிக்கும். திரையரங்கில் உள்ள அத்தனைப் பேரையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து கலகலக்க வைத்து விடுபவர். அவருடைய நகைச்சுவை அனைத்தையுமே ரசித்துள்ளேன். எனினும் அவரை வைத்து நான் இயக்கும் 'மன்னவன் வந்தானடி' முழு நீள நகைச்சுவைப் படம் அல்ல. அதில் நகைச்சுவை, காதல், குடும்ப உணர்வுகள் என எல்லாமே கலவையாக இருக்கும்.

"படம் விரைவில் வெளியாகும் என நம்பு கிறேன்," என்கிறார் செல்வராகவன்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!