‘தேவி 2’ படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியீடு

நடிகர் பிரபுதேவா, தமன்னா நடிப்பில் உருவாகியுள்ள 'தேவி 2' திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியாகியுள்ளது. இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் கடந்த 2016ஆம் ஆண்டு பிரபுதேவா நடிப்பில் வெளியான 'தேவி' திரைப்படம் சிறந்த வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகத்தை 'தேவி 2' என்ற தலைப்பில் இயக்கி வருகிறார் ஏ.எல்.விஜய். இதில் பிரபுதேவா, தமன்னா, ஆர்.ஜே.பாலாஜி, நந்திதா ஸ்வேதா, கோவை சரளா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஏற்கெனவே இப்படத்தின் 'டீசர்' வெளியான நிலையில், இப்போது இப்படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியாகியுள்ளது. இதில் முதல் பாகத்தில் வந்த ரூபி பேயுடன் புதிதாக ஒரு பேயும் சேர்ந்துகொண்டு அலப்பறை செய்யும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இப்படம் வரும் மே 31ஆம் தேதி உலகம் எங்கும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!