‘மகாமுனி’ முன்னோட்டக் காட்சி வெளியீடு

ஆர்யா நடிப்பில், சாந்தகுமார் இயக்கியிருக்கும் ‘மகாமுனி’ படத்தின் முன்னேட்டக் காட்சி வெளியாகி உள்ளது. இதில் ஆர்யாவின் நடிப்பு பேசப்படும் விதமாக அமைந்துள்ளதால் கண்டிப்பாக ஆர்யாவிற்கு இப்படம் ஒரு நல்ல திருப்புமுனையாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆர்யாவின் மனைவியாக இந்துஜா நடித்துள்ளார். ஆர்யா கதாநாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் இந்துஜா, மஹிமா நம்பியார், மாஸ்டர் ஹாசிக்,

ஜெயப்பிரகாஷ், பாலாசிங், இளவரசு, ரோஹினி, காளி வெங்கட், அருள்தாஸ், தீபா ஆகியோர் நடித்துள்ளனர். ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரித்திருக்கிறார். மிருகங்களாக உள்ள மனிதர்களை வேட்டையாடுபவராக, பிசிறே இல்லாமல் ஸ்கெட்ச் போட்டுத் தூக்கும் மகாமுனியாக ஆர்யா நடித்திருக்கிறார். தற்போது இந்தப் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுகுறித்து நடிகையும் ஆர்யாவின் மனைவியுமான சாயிஷா சைகல் தனது டுவிட்டர் பதிவில், “ரொம்ப புதுமையாக உள்ளார் என் கணவர் ஆர்யா. ‘மகாமுனி’ படத்துக்காக என்னால் பொறுமையாகக் காத்திருக்க முடியவில்லை,” என்று குறிப்பிட்டுள்ளார்.
 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

குழந்தைகள் ரியான், ரஹில் ஆகியோருடன் ஜெனிலியா, ரிதி‌ஷ் டெ‌ஷ்முக் தம்பதியர். படம்: ஊடகம்

20 Sep 2019

ஜெனிலியா: வயது பற்றி கவலையில்லை