‘நடிப்பில் ஒன்று சேர்வோம்’

பிரியா பிரகாஷ் வாரியர் ‘ஒரு அடார் லவ்’ படத்தில் தன்னுடன் நடித்த ரோஷன் அப்துல் ரவூஃபை காதலிப்பதாக வெளியான தகவல் குறித்து உண்மை தெரியவந்துள்ளது.

‘ஒரு அடார் லவ்’ படத்தில் ரோஷன் அப்துல் ரவூஃபைப் பார்த்துக் கண்ணடித்து ஒரே நாளில் இந்தியா முழுவதும் புகழ்பெற்றவர் பிரியா பிரகாஷ் வாரியர். அந்தக் காட்சி புகழ்பெற்றதே தவிர படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை. பிரியாவின் நடிப்பு அந்தப் படத்தின் இயக்குநருக்கே பிடிக்கவில்லை. இந்நிலையில் பிரியா வாரியர் ரோஷனை காதலிப்பதாக செய்திகள் வெளியாகின.

இதுகுறித்து பேட்டி ஒன்றில் கூறியுள்ள பிரியா வாரியார், “வதந்திகள் குறித்துச் சொல்வதற்கு ஒன்றும் இல்லை. ரோஷன் என் நல்ல நண்பர். எங்களுக்கு இடையே நல்ல புரிதல் உள்ளது. அவ்வளவுதான். அவருடன் மீண்டும் சேர்ந்து நடிக்க ஆவலாக உள்ளேன். அவர் சிறந்த நடிகர், நல்ல நடனக் கலைஞர். எங்களுக்கு இடையேயான நட்பால் சிறப்பாக நடிக்கமுடியும். எங்கள் கூட்டணி விரைவில் மீண்டும் நடிப்பில் ஒன்றுசேரும்  என்று எதிர்பார்க்கிறேன்,” என்றார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

குழந்தைகள் ரியான், ரஹில் ஆகியோருடன் ஜெனிலியா, ரிதி‌ஷ் டெ‌ஷ்முக் தம்பதியர். படம்: ஊடகம்

20 Sep 2019

ஜெனிலியா: வயது பற்றி கவலையில்லை