ஹரிபிரியா: காய்ச்சலுடன் நடித்தேன்

கடும் போராட்டத்துக்குப் பிறகு கன்னடத்தில் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்துள்ளதாகச் சொல்கிறார் நடிகை ஹரிபிரியா. 

அடுத்து தமிழ் ரசிகர்கள் மனதிலும் நிரந்தரமாக இடம்பிடிக்கவேண்டும் என்பதுதான் இவரது இலக்காம். 

இவர் தமிழில் கடைசியாக நடித்த படம் ‘முரண்’. அதன்பிறகு பெரிய இடை வெளி ஏற்பட்டது ஏன் என்று கேட்டால், அதற்கு தாம் காரணமல்ல என்கிறார். 

“நல்ல வேடங்கள் அமைந்தால் யார்தான் வேண்டாம் என்று சொல் வார்கள்? நான் எதிர்பார்த்த வாய்ப்பு கள் கிடைக்கவில்லை. கிடைத் தால் நிச்சயம் தமிழில் நடிப் பேன்,” என்கிறார் ஹரி பிரியா.  

இவர் நடித்துள்ள ‘சூஜிதரா’ என்ற கன்னடப் படம் பெரும் எதிர்பார்ப் புகளை ஏற்படுத்தி உள்ளது. இதுவரை படம் பார்த்த பிரபலங் கள் பலரும் இவரது நடிப்பை வெகுவாகப் பாராட்டி உள்ளனர். 

கிழிந்த துணிகளைத் தைக்க உத வும் ஊசி, நூலைப்  போன்று வாழ்க் கையிலும் மனித உடலிலும்           ஏற்பட்டுள்ள கோளாறுகளை, பாதிப்புகளைச் சரிப்படுத்த ஊசியும் நூலும் தேவை எனும் கருத்தை வலியுறுத்தும் வகையில் இப்படம் உருவாகி உள்ளதாம். 

இந்தப் படம் தமிழிலும் மறுபதிப்பு செய்யப்பட உள்ளது. அவ்வாறு நடந்தால் அதைவிட மகிழ்ச்சியான விஷயம் வேறு இருக்காது என்கிறார்.

“நான் எதிர்பாராத வகையில் நடிகை யானேன். இந்த துறை மீது எனக்கு எந்த வித ஆர்வமும் இல்லை. எதிர்பாராத வகை யில் நடிகையாகி விட்டேன். எந்தவித எதிர்பார்ப்புகளும் இல்லாததால் ஏமாற்றங் களும் இல்லை. எனினும் இரண்டு, மூன்று படங்களில் நடித்தபிறகு இந்தத் துறையை நேசிக்கத் தொடங்கிவிட்டேன். அதன்பிறகு நல்ல வாய்ப்புகளாகத் தேடி வந்தன.

“பில்லா ஜமீந்தார்’, ‘முரண்’ (தமிழ்), ‘திருவம்பாடி தம்பண்’ (மலையாளம்) உள்ளிட்ட படங்கள் நல்ல நடிகை என்ற பெயரைப் பெற்றுத் தந்தன. 

“தற்போது ஒவ்வோர் ஆண்டும் குறைந்தபட்சம் இரண்டு வெற்றிப் படங் களிலாவது நான் இடம்பெறுகிறேன் என் பது மகிழ்ச்சி அளிக்கிறது,” என்று சொல் லும் ஹரிபிரியாவுக்கு மேடை நாடகங்கள் மீதும் ஈடுபாடு ஏற்பட்டுள்ளதாம். 

மேடையிலும் தமது நடிப்பை அரங்கேற்றி சாதிக்கவேண்டும் என விரும்புகிறார். இந்த ஆர்வத்தைப் பூர்த்தி செய்யும் வகை யில்தான் ‘சூஜிதரா’ படம் அமைந்திருப்ப தாகச் சொல்கிறார்.

“இப்படத்தின் இயக்குநரும் இதர கலை ஞர்களும் மேடை நாடக அனுபவம் உள்ள வர்கள். திரைத்துறையில் இது ஒரு நல்ல சோதனை முயற்சியாக அமையும்,” என்று இயக்குநர் என்னிடம் தெரிவித்தார். 

“தாம் சொன்னது போலவே மிக யதார்த் தமான வகையில் இப்படத்தை அவர் உரு வாக்கி இருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது,” என்கிறார் ஹரிபிரியா.

இப்படத்தின் படப்பிடிப்பின்போது சில நாட்கள் காய்ச்சலால் அவதிப்பட்டாராம். ஓய்வெடுக்குமாறு படக்குழுவினர் வலி            யுறுத்திய போதும்கூட அதிகம் மெனக் கெட்டு நடித்ததாகச் சொல்கிறார்.

“அந்த மெனக்கெடலும் உழைப்பும் வீண் போகவில்லை. என் முகம் சற்றே வாடியிருந்த போதிலும் சில உணர்வுபூர்வ மான காட்சிகளுக்கு அந்த வாட்டம் கச்சித மாகப் பொருந்திப்போனது,” என்கிறார் ஹரிபிரியா.