சமையலையும் உணவையும் பறைசாற்றும் ‘மிஸ்டர் ஷெஃப்’

சிங்கப்பூரில் நடைபெறும் சமையல் போட்டியில் கலந்து கொள்ள வருபவர்களில் மதுரை யைச் சேர்ந்த ஒரு பெண்ணும் இருக்கிறார். அந்தப் போட்டியில் அவர் கலந்துகொண்டதால் அவரின் வாழ்க்கை எவ்வாறு மாறுகிறது என்பதை விளக்கும் படம் ‘மிஸ்டர் ஷெஃப்’. இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சி கள் சிங்கப்பூரில் படமாக்க இருக்கின்றன.

கொரிய திரைப்படத்தின் மறு பதிப்பாக உருவாகும் இந்தப் படம் அனைத்துலகத் தமிழ் மக்களைக் கவரும் என்கிறார் இந்தப் படத்தின் இயக்குநரும் தயாரிப்பாளருமான திரு பாலா சுப்பிரமணியம்.

படத்தில் கேளிக்கை உட்பட சமூக கருத்துகள் சில உள்ளடக்கப்படும் என்றும் எல்லா வயதினருக்கும் பொருந்தும் குடும்பப் படமாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

“இந்தப் படத்தைப் பார்த்தபின் மக்கள் படத்தைப் பற்றி ஒரு முறையாவது பேசவேண்டும் என்ற எண்ணத்தில் சமூக விழிப்புணர்வைத் தூண்டும் வகையில் கருத்துகளைச் சேர்த்திருக்கிறோம்.

“இந்த படத்தில் மூன்று தலை முறைகளின் உணவு பழக்கங்களைப் பற்றி விளக்கி இருக்கிறோம்.

“நம் முன்னோடி தலைமுறை யினருடன் ஒப்பிடும்போது நம் உணவு பழக்கங்களில் பெரும் வித்தியாசங்கள் உள்ளன. உணவுப் பழக்கங்கள் போக, அதன்மீது உள்ள கண்ணோட்டமும் மாறியுள்ளது. இது வளர்ச்சியைக் குறிக்கிறதா அல்லது நோய்களுக்கு வழிவகுக்கிறதா என்பதைப் படத்தில் காணலாம்.

“‘கிரிப்டோன் ஸ்டுடியோஸ் ஆசியா’ என்ற உள்ளூர் தயாரிப்பு நிறுவனம், ‘கெனான்யா ஃபிலிம்ஸ்’ என்ற இந்திய நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கும் இந்த திரைப்படத்திற்கு சிங்கப்பூர் பயணத் துறைக் கழகம் ஆதரவு அளித் திருக்கிறது.

“இந்தப் படத்தை இயக்குநர்

திரு பாலா சுப்பிரமணியம், கிரிப்டோன் நிறுவனத்தைச் சேர்ந்த இயக்குநர் திரு J. செல்வகுமார் ஆகியோர் இயக்குகிறார்கள். படத்தை திரு. செல்வகுமாரும், திரு C. சாந்தகுமாரும் தயாரிக்கிறார்கள்.

“ஜூலையில் தொடங்கும் படப்பிடிப்பு 25 நாட்களுக்கு சிங்கப்பூரிலும் 10 நாட்கள் மதுரையிலும் நடைபெற இருக்கின்றன. ஆறு மாதத்திற்குப் பிறகு அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் இந்தப் படம் வெளியாகும்,” என்று நம்பிக்கை தெரிவித்தார் திரு. பாலா.

“உணவு என்பது சிங்கப்பூரையும் இந்தியர்களையும் இணைக்கும் ஒன்று. நம் சமூகத்தில் அனைவருக்கும் உணவும் உணவு தயாரிக்கும் முறைகளிலும் அதிக நாட்டம் உண்டு.

“குடும்பம் சார்ந்த பாரம்பரியங் களிலும் உணவு முக்கியமான இடம்பெறுகிறது. இந்த திரைப்படத்தில் இதுபோன்ற அம்சங்கள் அழகாக சங்கமிக்கின்றன,” என்றார் இந்தப் படத்திற்கு நிதி ஆதரவு வழங்கி வரும் துணைத் தயாரிப்பாளரான திருமதி ஆனந்தித்தா கோஷ்.2019-06-02 06:00:00 +0800

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!