நேர்கொண்ட பார்வை முன்னோட்ட காட்சி; 5 மில்லியனுக்கு மேல் பார்வை

அஜித் நடிப்பில் வெளியாகவிருக்கும்  'நேர்கொண்ட பார்வை'  புதிய திரைப்படத்தின் முன்னோட்ட காட்சி நேற்று வெளியிடப்பட்டது.

அதற்குள் குறைந்தது 5.5 மில்லியன் பேர் அதனை யூடியூப்பில் பார்வையிட்டுள்ளனர்.

பிரபல இந்தி திரைப்படமான 'பிங்க்' படத்தின் 'ரீமேக்' தான் 'நேர்கொண்ட பார்வை என அறியப்படுகிறது.

வினோத் இயக்கும் இந்த படத்தில் அஜித் வழக்கறிஞர் வேடத்தில் நடிக்கிறார். இதில் அவருக்கு ஜோடியாக வித்யா பாலனும் நடிக்கிறார். இந்தத் திரைப்படம் வரும் ஆகஸ்ட் மதம் 10 ஆம் தேதி திரைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. போனி கபூர் இந்த படத்தை தயாரிக்கிறார்.