‘ஜெயா ஸ்டார் சிங்கர்’ போட்டிக்குச் செல்லும் மலேசியர்

‘பிக்பாஸ் 3’ நிகழ்ச்சியில் முதன்முறையாக முகென் ராவ் என்ற மலேசியர் ஒருவர் பங்கேற்கும் இந்நேரத்தில் மற்றொரு மலேசியர் ஜெயா டிவியின் ‘ஸ்டார் சிங்கர்’ பாட்டுப் போட்டியில் பங்கேற்கவுள்ளார்.சாய் சுதா என்ற அந்த மலேசியர் போட்டிக்கான தெரிவுச் சுற்றைக் கடந்திருக்கிறார். இனிவரும் சுற்றுகளையும் கடந்து இறுதிச் சுற்றுவரை அவர் சென்று வெற்றி அடையவேண்டும் என்பது மலேசியர்கள் பலரின் விருப்பமாக உள்ளது.

மலேசிய தொலைக்காட்சி ஒளிவழியான ‘ஏஸ்ட்ரோ வானவில்’இல் ஒளியேறிய ‘சூப்ப ர்ஸ்டார் 2013’ பாட்டுப் போட்டியில் சாய் சுதா முதன்முதலாகத் தமது இசைப்பயணத்தைத் தொடங்கினார். அந்தப் போட்டியில் சாய் சுதா மக்கள் தெரிவு விருதையும் சிறந்த பெண் பாடகி விருதையும் பெற்றார்.