‘வடசென்னை 2’: தெளிவுபடுத்திய தனுஷ்

‘வடசென்னை’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் நிச்சயம் வெளிவரும் என்று நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார். 

அதேசமயம் தான் நடிக்கும் திரைப்படங்கள் குறித்து வெளியாகும் வதந்திகளை ரசிகர்கள் நம்பவேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். 

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த படம் ‘வடசென்னை’. இதற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. தனுஷின் நடிப்பும்  பலரால் பாராட்டப்பட்டது. 

இந்நிலையில்  இப்படத்தின் இரண்டாம் பாகம் உடனுக்குடன் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், அடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் ‘அசுரன்’ என்ற படத்தில் நடிக்க முடிவு செய்தார் தனுஷ். 

இதையடுத்து வெற்றிமாறன் கூறிய கதையில் திருப்தி இல்லாததால் ‘வடசென்னை’ இரண்டாம் பாகத்தை தனுஷ் ஒத்திவைத்ததாகத் தகவல் வெளியானது. மேலும், அடுத்த சில நாட்களில் ‘வடசென்னை’ படம் கைவிடப்பட்டதாகவும் கூறப்பட்டது. இதுகுறித்து தனுஷ், வெற்றிமாறன் ஆகிய இருவருமே வாய் திறக்கவில்லை. 

இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவின் மூலம் ‘வடசென்னை-2’ குறித்து எழுந்த சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் தனுஷ். 

இப்படம் குறித்து தனது ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ள குழப்பங்களுக்கு என்ன காரணம் என தமக்குத் தெரியவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

“’வடசென்னை’ இரண்டாம் பாகம் நிச்சயம் உருவாகும். ஒருவேளை இதில் ஏதேனும் மாற்றம் இருப்பின் நானே எனது சமூக வலைத்தளப் பக்கத்தில் தகவல் தெரிவிப்பேன். அதுவரை எனது படங்கள் குறித்த வதந்திகள் எதையும் நம்ப வேண்டாம். ரசிகர்களுக்கு எனது அன்பு,” என்று தெரிவித்துள்ளார் தனுஷ். 

இதன்மூலம் வடசென்னை இரண்டாம் பாகம்  உருவாவது உறுதியாகி உள்ளது. இதனால் தனுஷ் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

இதற்கிடையே ‘அசுரன்’ படம் தனுஷ் எதிர்பார்த்ததைவிட சிறப்பாக உருவாகி உள்ளதாகத் தகவல். இதனால் திருப்தி அடைந்துள்ள அவர், மீண்டும் வெற்றி மாறனுடன் இணைந்து செயல்பட விருப்பம் தெரிவித்துள்ளார்.

‘வடசென்னை-2’க்குப் பிறகு இக்கூட்டணி மீண்டும் ஒருமுறை இணையக்கூடும். இதற்கிடையே, எனை நோக்கி பாயும் தோட்டா தடைகளை மீறி வெளியீடு காண்பது தனுஷை மேலும் உற்சாகப்படுத்தி உள்ளது. கௌதம் மேனன் இயக்கத்தில் மேகா ஆகாஷுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார் தனுஷ். வரும் 26ஆம் தேதி இப்படம் வெளியீடு காண உள்ளது.

தர்புகா சிவா இசையமைத்துள்ளார். சசிகுமார், ராணா, வேல ராமமூர்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர். இந்தப் படம் வசூல் ரீதியில் நிச்சயம் சாதிக்கும் என தனக்கு நெருக்கமானவர்களுடன் கூறி வருகிறாராம் தனுஷ்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

‘சிக்ஸர்’ படத்தின் இயக்குநர் சாச்சியின் சகோதரி சிந்துவை நடிகர் மணந்துள்ளார். படம்: ஊடகம்

13 Dec 2019

நடிகர் சதீஷ் திருமணம்: சிவகார்த்திகேயன் தம்பதியர் நேரில் வாழ்த்து
தமிழில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஸ்‌ரேயா நடிக்கும் படம் ‘சண்டக்காரி’. இந்தப் படம் பெரியளவில் வெற்றி பெறும் என்று நம்புகிறாராம். அதன் பிறகு தமிழில் மீண்டும் வெற்றி வலம் வருவேன் என்றும்  அவர் சொல்கிறார். படம்: ஊடகம்

தமிழில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஸ்‌ரேயா நடிக்கும் படம் ‘சண்டக்காரி’. இந்தப் படம் பெரியளவில் வெற்றி பெறும் என்று நம்புகிறாராம். அதன் பிறகு தமிழில் மீண்டும் வெற்றி வலம் வருவேன் என்றும்  அவர் சொல்கிறார். படம்: ஊடகம்

13 Dec 2019

போலிசாரிடம் ‘சிக்கிய’ ஸ்‌ரேயா

‘50/50’ படத்தில் யோகிபாபு, ராஜேந்திரன், ஜான் விஜய்.

13 Dec 2019

புதுப்படத்தில் யோகி பாடிய ‘கோலமாவு கோகிலா’ பாடல்