திவ்யா: ஆரோக்கிய அரசியலே தேவை

நடிகர் சத்யராஜ் அதிரடி நடிப்புக்கும் பேச்சுக்கும் பெயர் பெற்றவர். தந்தையைப் போலவே செயல்படுகிறார் அவரது மகள் திவ்யா சத்யராஜ்.

சிறந்த ஊட்டச்சத்து நிபுணருக்கான விருதைப் பெற்றவர். வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றாலும் சமூக சேவைகளில் நாட்டம் உள்ளவர். அவ்வப்போது நாட்டு நடப்புகள் குறித்து தனது சமூக வலைத்தளப் பக்கங்களில் கருத்து தெரிவிப்பார் திவ்யா. அதைக் கவனித்து பின்னூட்டமிடுவதற்கு என்றே பலர் காத்திருக்கிறார்கள்.

இந்நிலையில் தமது அரசியல் ஆர்வம் குறித்து அண்மைய பேட்டி ஒன்றில் விரிவாகப் பேசியுள்ளார் திவ்யா. அரசியலுக்கு வர விரும்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

“ஓர் அமைப்பை மேம்படுத்த வேண்டும் என்றால் நாம் அந்த அமைப்பில் இருந்தால்தான் சாத்தியம். வருங்காலத் தலைமுறைக்கு நல்ல ஆரோக்கியமான அரசியலை அறிமுகப்படுத்தலாம். நான் மற்ற பிரச்சினைகளைவிடவும் உடல்நலத்தை, ஆரோக்கியத்தை முன்நிறுத்துகிறேன்.

“இது சரியில்லை, அது சரியில்லை என புலம்புவதில் பலனில்லை. மாறாக நிர்வாகத்தில் நாமே நுழைந்துவிட வேண்டியதுதான்,” என்கிறார் திவ்யா.

நேர்மையும் உண்மையும் அரசியலின் இரண்டு பக்கங்களாக மாறும்போதுதான் மக்கள் கனவு காணும் நாட்டை உருவாக்க முடியும் என்று குறிப்பிடுபவர், ஒரு தமிழ் மகளாக, தமிழர்களின் ஆரோக்கியத்திற்காக அரசியலுக்கு வருகிறேன் என்கிறார்.

“அப்பாவும் அம்மாவும் என்னைப் பற்றி புரிந்து வைத்துள்ளனர். எனது முடிவுகளுக்காக எப்போதும் காத்திருந்து அரவணைப்பு தருவார்கள். ஒருநாளும் என் நல்லுணர்வுகளுக்கு அவர்கள் தடை சொன்னதில்லை.

“சத்யராஜ் என்ற மனிதருக்கு மகளாக இருப்பது எனக்கு மிகவும் பெருமை. நான் கடுமையாக உழைக்கும் பெண். எனது அக்கறைகள் உண்மையானவை என அவர்கள் அறிவார்கள்.

“நான் அப்பாவுக்கு ரொம்பப் பிரியமான பெண். ஆனால் அவரை சார்ந்து இருந்தது கிடையாது. அவரின் புகழையும் பின்புலத்தையும் எனது அரசியலுக்குப் பயன்படுத்திக்கொள்ள மாட்டேன்.

“நான் தனித்தும் சுதந்திரமாகவும் சுயமாகவும் செயல்பட விரும்புகிறேன்,” என்கிறார் திவ்யா.

நூறு கோடியைத் தாண்டிய மக்கள் இருக்கும் தேசத்தில் தமது முயற்சிகள் அனைத்தையும் மாற்றிவிடும் என்று சொல்வதற்கில்லை என்று யதார்த்தம் உணர்ந்து பேசுபவர், அதேவேளையில் எந்தப் பெரிய பாதைக்கும் முதல் அடிதான் காரணமாகிறது என்பதையும் சுட்டிக்காட்டுகிறார்.

ஈழ அகதிகளைச் சந்தித்தீர்களே?

“ஆமாம். அவர்களின் உடல் நலன், உணவுப் பழக்கங்கள், குறைகள், சீர்செய்யப்பட வேண்டிய விஷயங்களை அவர்களோடு கலந்து பேசினேன்.

“அப்பா ஈழத்தமிழர் மீது கொண்டிருக்கும் அன்பை வரையறுக்க முடியாது.

“அப்பாவின் செயல்பாடுகள், மேடைகளில் அவர் உணர்ச்சிவசப்பட்டு பேசிய விஷயங்கள் எல்லாம் அவர்களுக்குத் தெரிந்துள்ளன,” என்கிறார் திவ்யா.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!