ரவி எழுதிய மூன்று கதைகள்

‘கோமாளி’ படம் சிறு சர்ச்சைகளை எதிர்கொண்ட போதிலும் திட்டமிட்டபடி வெளியீடு கண்டு நல்ல வசூலையும் பெற்று வருவதால் உற்சாகமாக இருக்கிறார் ஜெயம் ரவி.

‘அடங்க மறு’ படம் வெளியான போது சமூக விவகாரங்கள் தொடர்பான தன் கருத்துக்களை வெளிப்படுத்த திரைப்படங்களைப் பயன்படுத்திக் கொள்வதாகத் தெரிவித்திருந்தார் ரவி.

‘கோமாளி’யில் ஏதேனும் நல்ல கருத்து வலியுறுத்தப்பட்டுள்ளதா?

“ஆமாம். ஆனால், எனது முந்தைய படங்களைப் போல் அல்லாமல் நம் சமூகத்துக்குத் தேவையான அடிப்படையான ஒரு விஷயத்தை நாசூக்காகவும் சற்று எளிமையாகவும் சொல்லியிருக்கிறோம். ‘கோமாளி’யின் மையக்கருத்து என்றால் அது மனிதநேயம்தான்.

“பிரச்சினை வந்தால் ஒன்று சேர்கிறோம். ஆனால், பிரச்சினை வந்தால்தான் சேரவேண்டுமா? என்பதுதான் இப்படம் நமக்குச் சொல்லும் கருத்து,” என்கிறார் ஜெயம் ரவி. இப்படத்துக்காக 20 கிலோ எடை குறைத்துள்ளார் இவர்.

பள்ளி மாணவராக திரையில் 15 நிமிடங்கள் தோன்றும் காட்சிகளுக்காகவே இந்த மெனக்கெடலாம். இரண்டு நிமிடமே இந்தக் காட்சிகள் இடம் பெற்றிருந்தாலும் நிச்சயம் எடையைக் குறைத்திருப்பேன் என்கிறார்.

“இயக்குநர் கதையின் இந்தப் பகுதியை விவரித்தபோது எனது சிறுவயது கதாபாத்திரத்தில் வேறொரு நடிகர் நடிப்பதை விட நானே நடித்தால்தான் பொருத்தமாக இருக்கும் எனக் கருதினேன். அதனால், சுமார் 2 மாதங்கள் கடுமையாக உடற்பயிற்சி செய்து உடல் எடையைக் குறைத்தேன்.

“அதன் பிறகும் கூட சோதனை முயற்சியாக சில காட்சிகளைப் படமாக்கிப் பார்த்தோம். பிறகுதான் உண்மையான படப்பிடிப்பு நடந்தது.”

கடந்த கால தோல்விகளை மறக்காமல் தன் நினைவில் வைத்திருப்பதாக குறிப்பிடுபவர் அவற்றிலிருந்து கற்ற பாடங்களையும் மறப்பதில்லை என்கிறார். குறிப்பாக, ‘தில்லாலங்கடி’ படம் கற்றுத் தந்த பாடத்தை முக்கியமானதாகக் கருதுகிறாராம்.

“தெலுங்கில் வெளியான ’கிக்’ படத்தின் மறுபதிப்பாக ‘தில்லாலங்கடி’யை உருவாக்கினோம். அதில் தமிழ் ரசிகர்களின் ரசனைக்கேற்ப சில மாற்றங்களைச் செய்தோம். ஆனால், அந்த யுக்தி எடுபடவில்லை. ஆனால், ‘கோமாளி’ வெறும் நகைச்சுவைப் படம் மட்டுமல்ல. அதில் சுவாரசியமான புதுமைகள் சிலவற்றைப் புகுத்தி உள்ளோம். தவிர, சற்றே மெருகேறிய ஜெயம் ரவியையும் படத்தில் காணலாம்.

‘அடங்க மறு’ போன்ற விறுவிறுப்பான படத்தைக் கொடுத்த பிறகு கோமாளி போன்ற ஜாலியான படங்களில் நடிப்பது சரிதானா?

“ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும். ஒரு நடிகராக என்னை எப்போதுமே ஊக்கப்படுத்திக் கொள்கிறேன். சாதாரண விஷயங்களில் இருந்து சற்று விலகியே நிற்கிறேன்.

“சோதனை முயற்சிகளுக்காக நான் தயங்கியதே இல்லை. ஒவ்வொரு முறையும் அத்தகைய முயற்சியில் ஈடுபடும்போது ரசிகர்கள் என்னை ஊக்கப்படுத்தி வந்துள்ளனர்.

“படப்பிடிப்பின்போது எந்தக் கட்டத்திலும் எனக்கு போரடித்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறேன். அப்போதுதான் திரையரங்கில் ரசிகர்களுக்கும் போரடிக்காது,” என்கிறார் ரவி.

கோமாளி இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் புதுமுகம் என்றாலும் அவர் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்ததாகக் குறிப்பிடுபவர், வயது, அனுபவத்தை விட சினிமா மீதான ஈடுபாடுதான் ஒரு கலைஞரிடம் இருக்கவேண்டிய முக்கியமான தன்மை என்கிறார்.

ஜெயம் ரவிக்குள் ஓர் இயக்குநரும் இருப்பதை அவரே பலமுறை கூறியிருக்கிறார்.

தன் மனதில் தோன்றிய சில கதைகளை எழுதி வருவதாகவும் முன்பு கூறியிருந்தார். தற்போது அவற்றுள் சில கதைகளை எழுதி முடித்துள்ளாராம்.

“முதல் கதை மிகவும் நகைச்சுவையானது. நானும் யோகிபாபுவும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளோம்.

“மற்றொரு கதை தீவிரவாதம் தொடர்பான எனது கருத்தாகவும் சாதி, மத பேதம் குறித்த எனது பதிவாகவும் இருக்கும். இதிலும் நானே கதாநாயகனாக நடிக்க முடிவு செய்துள்ளேன்.

“மற்றொரு கதை தேசிய அளவில் கவனம் ஈர்க்கவேண்டும் என விரும்புகிறேன். அதனால், இந்தியில் பெரிய நடிகரை வைத்து அப்படத்தை உருவாக்க நினைக்கிறேன்.

“திரைக்கு பின்னேதான் எனது பங்களிப்பு இருக்கும். மிகப் பிரமாண்டமான முறையில் இப்படம் உருவாகும்.

“ஆனால், இவை எல்லாம் எப்போது சாத்தியமாகும் என்று எனக்குத் தெரியவில்லை,” என்கிறார் ஜெயம் ரவி.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!