தமிழை சரியாக உச்சரிக்கும் ரம்யா பாண்டியனை பாராட்டிய விவேக்

தமிழை சரியாக உச்சரிக்கும் ரம்யா பாண்டியனை தமிழ் சினிமா வரவேற்க வேண்டும் என்பது எனது பணிவான வேண்டுகோள் என்று நடிகர் விவேக் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

‘ஜோக்கர்’ பட நாயகி ரம்யா பாண்டியன்தான் குடும்பப் பாங்கான கதாபாத்திரத்தில் நடிப்பதால்தான் தனக்கு சரியான பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்ற விரக்தியில் உள்ளதாகக் கூறப்படுகிறது. 

இந்நிலையில், நடிகர் விவேக் அவரது டுவிட்டர் பக்கத்தில், “பண்பும் அழகும் பதில்களில் பணிவும் கொண்ட ரம்யா பாண்டியன் தன் நடிப்பால் ‘ஜோக்கர்’, ‘ஆண் தேவதை’ படங்களில் மிளிர்ந்தார்.

“தமிழை தாய்மொழியாகக் கொண்டு அதை சரியாக உச்சரித்தும் வரும் இவரை தமிழ் சினிமா வரவேற்க வேண்டும் என்பது என் பணிவான வேண்டுகோள்,” என்று பதிவிட்டிருக்கிறார். 

இந்த செய்தி அட்லீ, முருகதாஸ், ஷங்கர் போன்ற பிரம்மாண்ட இயக்குநர்களின் செவிகளுக்கும் சென்றிருக்கும் என்று நம்பலாம்.