லாஸ்லியாவை தந்தை ஏசியதால் புதிய ‘மீம்ஸ்’ உற்பத்தி

80-வது நாளாக ஒளிபரப்பாகியுள்ள ’பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் அடுக்கடுக்காகப் பல்வேறு குட்டி நாடகங்கள் அரங்கேறி வருகின்றன.

இயக்குநர் சேரன் பிக் பாஸ் அறைக்கு அனுப்பப்பட்ட நிகழ்வு பார்வையாளர்களிடையே ஒருவித மர்ம உணர்வினை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே அந்நிகழ்ச்சிக்கான அண்மை முன்னோட்டக் காணொளி,  பங்கேற்பாளர் லாஸ்லியாவின் தந்தை, பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைவதைக் காட்டியது. 

நெகிழ்ச்சியுடன் லாஸ்லியா அழுது தனது அப்பாவின் காலில் விழுந்தபோதும் அவரது அப்பா கறாராகவே காணப்பட்டார். இதற்கான காரணம் மற்றொரு முன்னோட்டக் காணொளியில் புலப்பட்டது.  அந்தக் காணொளியில் லாஸ்லியாவை அவரது தந்தை ஏசுவதைக் காண முடிகிறது. “பாக்குறவங்க காறி துப்புற அளவுக்கு என்னை தலை குனிய வச்சிட்டல்ல ” என்று  லாஸ்லியாவின்   தந்தை திட்டியுள்ளார்.

லாஸ்லியா அழுது கொண்டிருக்க, பயம் கலந்த பார்வையுடன் நின்று கொண்டிருந்தார் சக போட்டியாளர் கவின். அதனை மையப்படுத்தி பல்வேறு மீம்ஸ் எனப்படும் கேலி வாசகங்களைக் கொண்ட படங்கள் இணையத்தில் வெளிவந்துள்ளன.

 

Loading...
Load next