‘விரைவில் தமிழில் பேசுவேன்’

ஒரே படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் முக்கியமான இடத்தைப் பிடித்து தெம்பாக அமர்ந்துவிட்டார் அனு இமானுவேல்.

‘நம்ம வீட்டுப் பிள்ளை’யைப் பார்த்த இளையர்களின் இதயத் துடிப்பு எக்கச்சக்கமாக எகிறிக் கிடக்கிறது. இளையர்கள் மத்தியில் இப்போது ‘மயிலாஞ்சி’ அனுவைப் பற்றித்தான் பேச்சு.

கேரள மாநிலத்தைச் சேர்ந்த இவர், வளர்ந்தது அமெரிக்காவில் டெக்சாஸ் மாநிலத்தில்தானாம். அங்குதான் பள்ளிப் படிப்பு முடித்திருக்கிறார். அனுவின் குடும்பத்திலிருந்து ஒருவர்கூட சினிமா துறைக்கு வந்ததில்லை.

ஆனால், வெள்ளிக்கிழமை தோறும் அமெரிக்காவில் வெளியாகும் பல்வேறு இந்திய மொழிப் படங்களை மொத்த குடும்பமும் தவறாமல் பார்த்து ரசிக்குமாம். அவற்றிலும் மலையாளம், தமிழ்ப் படங்களுக்குத்தான் முன்னுரிமை.

“சிறு வயதில் சினிமாவுக்கும் மாடலிங், விளம்பரத் துறைக்கும் இடையேயான வித்தியாசம் எனக்குத் தெரியாது. மாடலிங் செய்ய விரும்புகிறேன் என்று சொன்னபோது அப்பாவுக்கு பலத்த அதிர்ச்சி. அவர் கொஞ்சம் கண்டிப்பானவர்.

“இருந்தாலும் மாடலிங் துறையில் என்ன வேலை செய்யப் போகிறாய்? என்று பொறுமையுடன் விசாரித்தார். அத்துறையில் பல்வேறு பணிகள் இருப்பதுகூட அப்போது எனக்குத் தெரியவில்லை.

“நடிகை அசின் மாதிரி பெயரெடுக்க விரும்புகிறேன் என்றேன். வீட்டில் சிரித்தனர். அசின் ஒரு நடிகை என்பதை விவரித்து நடிப்பு வேறு, மாடலிங் வேறு என்று புரிய வைத்தனர். நான் அந்தளவு வெகுளியாக்கும்,” என்று சிரிக்கிறார் அனு.

அதன்பிறகு கல்லூரியில் சேரும் வரை சினிமா குறித்தெல்லாம் யோசிக்கவே இல்லையாம். கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்தபோது மலையாளத்தில் ‘ஸ்வப்ன சஞ்சரி’ பட வாய்ப்புத் தேடி வந்திருக்கிறது.

“எப்போது வேண்டுமானாலும் படித்துக்கொள்ளலாம், ஆனால், சினிமா வாய்ப்பு தேடி வரும்போது பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென முடிவெடுத்தேன். குடும்பத்தாரின் அனுமதியுடன் சினிமாவில் அறிமுகமானேன்.

“முதல் படத்தில் நடித்த பிறகு மீண்டும் கல்லூரிப் படிப்பைத் தொடர்ந்திருக்கிறார் அனு. ஆனால், சினிமா இவரை விடவில்லை. மலையாள நடிகர் நிபின் பாலியுடன் ஒரு படம், தெலுங்கில் நானியுடன் ஒரு படம் என்று அடுத்தடுத்து இவர் நடித்த படங்கள் வெற்றி பெற தெலுங்கில் முன்னணி நாயகியாகி விட்டார்.

“தெலுங்குதான் முக்கியம், பிற மொழிகள் தேவையில்லை என்றெல்லாம் நான் கருதவில்லை. எந்த மொழியில் நடித்தாலும் எனக்கு எல்லாமே ஒன்றுதான். ‘நம்ம வீட்டுப் பிள்ளை’யில் நான் கலகலப்பான பெண்ணாக நடித்தேன். ஆனால், நிஜத்தில் எனக்கு தோழிகள் குறைவு. அதிகம் பேசமாட்டேன். பொதுவாக சற்று ஒதுங்கியே இருப்பேன்,” என்கிறார் அனு இமானுவேல்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!