பிரியா: வெளிப்படையாகப் பேசுவதையே விரும்புகிறேன்

பொதுவாக எந்த நடிகரை மிகவும் பிடிக்கும் என்ற கேள்விக்குப் பெரும்பாலான கதாநாயகிகள் பதிலளிக்கத் தயங்குவார்கள். 

ஆனால், இந்த விஷயத்தில் நடிகை பிரியா ஆனந்த் கொஞ்சம் வித்தியாசமானவர். அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவரிடம் ’விஜய், அஜித் இருவரில் உங்களுக்கு அதிகம் பிடித்தவர் யார்?’ என்று கேட்கப்பட்டது. 

அதற்கு சற்றும் தயங்காமல் அஜித் என்று பதிலளித்தார் பிரியா. இது தொடர்பாக காணொளிப் பதிவு ஒன்று இணையத்தில் வெளியானது. அதைக் கண்ட ரசிகர் ஒருவர் அஜித் என்று கூறிய நடிகை பிரியாமணிக்கு வாழ்த்துகள் என்று சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டிருந்தார்.

இதனால் அதிர்ச்சியடைந்த பிரியாமணி அது நான் அல்ல, என்று பதிலளித்தார். 

இந்நிலையில் இவ்விரு பின்னூட்டங்களுக்கும் கீழே, “அஜித்தைப் பிடிக்கும் என்று சொன்னது நான்தான்,” எனப் பதில் பின்னூட்டம் இட்டுள்ளார் பிரியா ஆனந்த். வெளிப்படையாகப் பேசும் பிரியாவைப் பலரும் பாராட்டி உள்ளனர்.

“ஒருவரைப் பிடிக்கும் என்று சொல்வதற்கு ஏன் தயங்க வேண்டும்? இதில் பயப்படவும் தயங்கவும் என்ன இருக்கிறது?

“நான் எப்போதுமே வெளிப்படையாகப் பேசவே விரும்புவேன்,” என்கிறார் பிரியா ஆனந்த்.