ஊதியம் குறித்து வருந்தும் பிரியா

திறமைக்கேற்ற ஊதியம் கிடைக்காதது வருத்தமளிப்பதாகச் சொல்கிறார் பிரியாமணி. 

சில நடிகைகள் மட்டும் தங்கள் சம்பளத்தைக் கறாராகக் கேட்டு வாங்குவதாக அண்மைய பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். 

நயன்தாரா, அனுஷ்கா, சமந்தா ஆகிய மூவர்தான் பிரியாமணி குறிப்பிடும் நாயகிகள்.

“எனக்குத் தெரிந்த சில கதாநாயகிகள் திறமையின் அடிப்படையில் முன்னிலையில் உள்ளனர். எனினும் தங்களுக்கு உரிய சம்பளத்தைக் கேட்டு வாங்கும் நிலைமையில் அவர்கள் இல்லை. 

“கதாநாயகனைவிட நாயகிகளுக்குக் குறைவான சம்பளம் என்பது தீர்மானிக்கப்பட்டு விட்டது. குறைவான சம்பளம் என்பது ஒருபக்கம் இருந்தாலும், குறைந்தபட்சம் இந்தத் தொகை கொடுத்தால்தான் நடிக்கமுடியும் என்று நிர்ப்பந்திக்கக் கூடிய நிலையில் பெரும்பாலான நாயகிகள் இல்லை என்பது வருத்தமளிக்கிறது,” என்கிறார் பிரியாமணி.