‘கவர்ச்சியாக நடிப்பது குற்றச்செயல் அல்ல’

கூச்சத்தை சற்று மூட்டை கட்டி வைப்பதுதான் ஒரு நடிகையின் சிறந்த எதிர்காலத்துக்கு நல்ல பாதை அமைத்துக் கொடுக்கும் என்கிறார் நடிகை காவ்யா தப்பார்.

இவர் அண்மையில் வெளிவந்த ‘மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ்’ படத்தில் ஆரவ்வின் ஜோடியாக நடித்தவர்.

“கவர்ச்சி காட்டுவது குற்றச்செயல் அல்ல. ஆனால் அந்தக் கவர்ச்சியை யார் காட்டுகிறார்கள் என்பதைப் பொறுத்தும் இந்த விஷயம் மாறுபடும்.

“அடுத்ததாக கதையைப் பொறுத்தும் கவர்ச்சி வித்தியாசப்படும். கதைக்கு உண்மையாகவே தேவைப்படும் பட்சத்தில் கவர்ச்சி காட்டுவதில் தவறில்லை. அது கதையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் விதமாக இருக்கவேண்டும். நடிப்பவர்கள், படம் பார்ப்பவர்கள் மனதில் எந்த ஒரு நெருடலும் இருக்கக்கூடாது என்பதும் முக்கியம்,” என்கிறார் காவ்யா.

“அஜித்தின் ஆஸ்தான இயக்குநர் சரண் இயக்கத்தில் நாயகியாக அறிமுகமானது எனக்குக் கிடைத்த மிகப்பெரிய பாக்கியம்,” என்று வாய்ப்பு கொடுத்த இயக்குநரை மலையளவு பாராட்டும் காவ்யா ஊடகங்களுக்கு பேட்டி அளித்துள்ாளர்.

“நான் பிறந்து, வளர்ந்தது மும்பையில். சின்ன வயதிலிருந்தே நடிகையாகும் கனவு இருந்தது. நான் நடிகையானதில் என்னைவிட என் அப்பாவுக்குத்தான் அதிக மகிழ்ச்சி. இதையும் தாண்டி நடிப்பு எனக்கு மிக பிடிக்கும்.

“தமிழில் ‘மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ்’ படம் எனக்கு மிகவும் முக்கியமான படம். எல்லோருக்குள்ளும் கோலிவுட் மீது ஒரு கண் இருக்கத்தான் செய்கிறது. தமிழ் அறிமுகம் எனக்கு கூடுதல் மகிழ்ச்சியைத் தந்துள்ளது.

“ஆரம்பத்தில் தமிழ் மொழியை எப்படி உச்சரிக்கப் போகிறோம் என்ற அச்சம் இருந்தது. இயக்குநர் சரண் சார் கொடுத்த உற்சாகத்தில் பயமின்றி நடித்தேன்.

“தமிழில் நிறைய வாய்ப்புகள் வருகின்றன. பொறுமையாக படங்களை ஒப்புக்கொள்கிறேன். உடனடியாக நான் ஒப்புக்கொண்ட படம் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் படம். இந்த படத்தை தனஞ்செயன் தயாரிக்கிறார்.

“எனக்கு ‘விஸ்வரூபம்’ கமலைப் பிடிக்கும். தவிர ரஜினி, விஜய், அஜித் ஆகியோரின் நடிப்பும் பிடிக்கும்.

“அதேபோல் நடிகைகளில் என்னை அதிகம் கவர்ந்தவர் நடிகை தமன்னா. சுமார் பதினைந்து ஆண்டுகளாக சினிமாவில் இருக்கிறார். ஆண்டுகள் கடந்தாலும் அழகில் அள்ளுகிறார். அப்புறம் சமந்தாவையும் பிடிக்கும். திருமணத்துக்குப் பிறகும் நடிப்பில் பின்னியெடுக்கிறார்,” என்கிறார் காவ்யா தப்பார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!