ஒரே சமயத்தில் சின்னத்திரையிலும் வெள்ளித் திரையிலும் நடித்து வருகிறார் சாந்தினி.
‘சித்து +2’ படம் மூலம் அறிமுகமான இவர் நல்ல கதைகள் அமைந்தால் தயக்கமின்றி நடிப்பதாகச் சொல்கிறார்.
இந்நிலையில் கடந்தாண்டு நடன இயக்குநர் நந்தாவைக் காதலித்து மணந்துகொண்டவர் தற்போது ‘தாழம்பூ’ என்ற தொடரில் நடிக்கிறார்.
கைவசம் அரை டஜனுக்கும் மேற்பட்ட படங்களை வைத்துள்ளாராம்.
இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் தீவிரமாக இயங்கி வருகிறார் சாந்தினி.
அண்மையில் சில புகைப்படங்களுடன் அவற்றுக்குப் பொருத்தமான கவிதைகளையும் எழுதி வெளியிட்டுள்ளார்.
இதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பாம்.
எனவே தொடர்ந்து கவிதைகள் எழுதி அவற்றை சமூக வலைத் தளங்களில் பதிவு செய்யப் போகிறாராம்.
“நடிப்பு என்று வந்துவிட்ட பிறகு தொலைக்காட்சித் தொடரா, திரைப்படமா என்றெல்லாம் யோசிக்கக்கூடாது. கிடைத்த வாய்ப்புகளைப் பயன் படுத்திக்கொள்ள வேண்டும். இதுவே புத்திசாலித்தனமாகும்,” என்கிறார் சாந்தினி.