கொண்டாட்டத்துடன் துவங்கியது ‘தர்பார்’

எஸ் வெங்கடே‌ஷ்வரன்

பலரும் தூங்கிக் கொண்டிருந்த வேளையில் இரவு முழுவதும் விழித்திருந்து பிரபல இந்திய நடிகர் ரஜினிகாந்த நடித்த ‘தர்பார்’ திரைப்பட வெளியீட்டுக் கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தது சிங்கப்பூரிலுள்ள ரஜினி மக்கள் மன்றம்.

‘ஷா டவர்ஸ்’ கடைத்தொகுதியில் அமைந்துள்ள ‘கார்னிவல் சினிமாஸ்’ திரையரங்கில் தர்பார் திரைப்பட வெளியீட்டின் முதல் காட்சிக்கான அனைத்து நுழைவுச்சீட்டுகளையும் ரஜினி மக்கள் மன்றம் வாங்கிக்கொண்டு, ‘தர்பார்’ படத்தின் வெளியீட்டை திருவிழா போல கொண்டாடினார்கள்.

இந்தக் கொண்டாட்டங்களை தீவிர ரஜினி ரசிகர்களை உள்ளடக்கிய ரஜினி மக்கள் மன்றத்தின் 14 உறுப்பினர்கள் வழிநடத்தினர். அதிகாலை 5 மணியிலிருந்து திரையரங்கிற்கு மக்கள் வரத் தொடங்கினர். கிட்டத்தட்ட 300 ரசிகர்கள் கொண்டாட்ட நிகழ்ச்சிக்குத் திரண்டனர். சமூக ஊடகம் வழியாக நடத்தப்பட்ட போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற ரஜினி ரசிகர்கள் சிலருக்கு இந்த மன்றம் முதல் காட்சிக்கான நுழைவுச் சீட்டுகளை வழங்கியிருந்தது.

காலை 6 மணிக்கு மேள தாள இசையுடன் ரஜினியின் பதாகை ஒன்றுக்கு பூமாலை அணிவித்து, பூசணிக்காய், தேங்காய் உடைத்து கொண்டாட்டத்தைத் தொடங்கினர்.

அதிகாலை 6.30 மணிக்கு திரையிடப்பட்ட முதல் காட்சியில் நடிகர் ரஜினியின் அறிமுகத்தின்போது, ரசிகர்களுக்காக அக்காட்சி ஒரு நிமிடம் நிறுத்தி வைக்கப்பட்டது.

அந்த நேரத்தில் ரசிகர்கள் மேளமடித்து, ஆரவாரத்துடன் ஆடி தங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.

கொண்டாட்டத்தில் இடம்பெற்ற ரஜினியின் பதாகைகள், சிறப்பாகத் தயாரிக்கப்பட்ட ‘தர்பார் சட்டைகள்’, ரசிகர்கள் படம் எடுக்கும் வசதிகள், வாழ்த்து குறிப்புத்தாள் போன்ற அம்சங்களைத் தயாரிக்க கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் எடுத்ததாகக் குறிப்பிட்டது ரஜினி மக்கள் மன்றம்.

“ஒரு கல்யாணத்திற்கான ஏற்பாட்டை ஒரு குடும்பத்தினர் எப்படி ஒன்று சேர்ந்து செய்வார்களோ, அதேபோல இந்த கொண்டாட்டத்துக்கான ஏற்பாடுகளும் இருந்தன,” என்று திரைப்படம் பார்த்த பிறகு ரஜினி மக்கள் மன்றத்தின் உறுப்பினரான திரு கௌசிக் கார்த்திகேயன், 31 கூறினார்.

“ரஜினி திரைப்படத்தை முதல் நாள், முதல் காட்சியைப் பார்ப்பது எப்போதும் ஒரு திருவிழா போன்றுதான் இருக்கும்.

“படமும் சிறப்பாக இருந்ததால் அனைவரும் மகிழ்ச்சியும் மனநிறைவும் அடைந்தோம்,” என்றார் அவர்.

“இன்றைக்கே தைப்பொங்கல் வந்துவிட்டது போல இருக்கிறது. இன்று காலையே திரைப்படத்திற்கான நுழைவுச்சீட்டுகள் விற்றுத் தீர்ந்தன,” என்றார் ரசிகர்களுள் ஒருவரான திரு சுதன், 32.

“அப்பா, மகள் இடையேயான உன்னதமான உறவை வெளிப்படுத்தும் காட்சிகள் பிடித்தன. ரஜினியின் வசனங்களில், ‘ஐ ஏம் எ பேட் காப்’ என்று அவர் சொல்லும் வசனம் மிகவும் பிடித்தது,” என்றார் தீபலட்சுமி, 34.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் போலிஸ் அதிகாரியாக நடித்துள்ள ‘தர்பார்’ திரைப்படத்தில் அவருடன் இணைந்து நயன்தாரா நடித்துள்ளார். ரஜினி நடித்த 167வது படமான தர்பார் உலகம் முழுவதும் 7,000 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது என்று படத்தைத் தயாரித்த லைகா நிறுவனம் தெரிவித்துள்ளது. காவல்துறையின் பலத்தையும் முக்கியத்துவத்தையும் எடுத்துரைக்கும் இப்படம், பணத் திமிரால் சமுதாயத்திற்குக் கெடுதல் விளைவிப்பது மனிதருக்கு வீழ்ச்சியைத் தரும் என்பது போன்ற கருத்துகளை முன்வைக்கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!