‘தொடர் வெற்றி முக்கியம்’

சினிமா குறித்த தெளிவான பார்வையும் நேர்மையும் இருப்பதால்தான் தம்மால் திரையுலகில் முன்னணி இடத்தில் நீடிக்க முடிகிறது என்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

அண்மையில் இவர் நடிப்பில் வெளியான ‘வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர்’ மூலம் டோலிவுட்டிலும் பிரபலமான மகிழ்ச்சியில் இருப்பவர், எத்தகைய வேடமாக இருந்தாலும் மறுக்காமல் ஏற்று நடித்ததே தமது இன்றைய வளர்ச்சிக்குக் காரணம் என்கிறார்.

“சினிமாவில் நடிக்க வருவதற்கு முன் எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பேன் என்று உங்களுக்குத் தெரியும். முதலில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினேன்.

“பிறகு நடனப் போட்டியில் கலந்து கொண்டேன். சினிமாவுக்கு வந்ததும் இரண்டு அல்லது மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடித்தேன்.

“பிறகு ‘அட்டக்கத்தி’ படம் வெளி யானது. அடுத்து ‘காக்கா முட்டை’ வந்தது. சினிமாவில் தொடர்ந்து வெற்றிப் படங்கள் கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும். இல்லை என்றால், உடனே வீட்டுக்கு அனுப்பிவிடுவார்கள்,” என்று சொல்லும் ஐஸ்வர்யா. இன்று அனைத்து முன்னணி நாயகர்களுடனும் இணைந்து பல்வேறு மொழிகளில் நடித்துவிட்டார்.

கிட்டத்தட்ட 50 படங்களை நெருங்கிவிட்டதாகச் சொல்பவர், தன் மனதுக்கு சரியெனப்படும் படங்களை மட்டுமே தேர்வு செய்து நடிப்பதாகக் குறிப்பிடுகிறார்.

தொடர்ந்து தங்கை வேடத்தில் நடிப்பது ஏன்? என்று கேள்வி எழுப்புபவர்களுக்கு, நாயகிக்கு இணையான முக்கியத்துவம் கிடைப்பதாலேயே அவ்வாறு நடிப்பதாக பதில் வருகிறது. நிஜ வாழ்க்கையில் இவர் தன் அண்ணனுடன் ரொம்ப நெருக்கமாம். இருவரும் கூட்டாளிகள் போல் பேசிப் பழகுவார்களாம்.

“‘நம்ம வீட்டுப் பிள்ளை’ படத்தில் சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக நடித்த நான், உடனே விக்ரம் பிரபுவுக்கு தங்கையாக ‘வானம் கொட்டட்டும்’ படத்தில் நடித்தேன். நாயகன், நாயகிக்கு எவ்வளவு முக்கியத்துவம் தரப்பட்டதோ அதே முக்கியத்துவம் என் கதாபாத்திரத்துக்கும் கிடைத்ததைப் பார்த்திருப்பீர்கள்.

“நான் நடிக்கவில்லை என்றால், அந்த வேடத்தை இன்னொரு நாயகி ஏற்று நடிக்கப்போகிறார். யாருக்காகவும் சினிமா காத்திருக்காது. நான் இல்லை என்றால் இன்னொருவர்... அவர் இல்லை என்றால் மற்றொருவர்.”

ஒருமுறை மஞ்சிமா மோகன் இவரைத் தொடர்பு கொண்டு ஆலோசனை கேட்டாராம். விஜய் சேதுபதிக்கு தங்கையாக நடிக்கக் கேட்டு தன்னை அணுகியுள்ளதாகவும், என்ன முடிவெடுப்பது என ஆலோசனை கேட்டாராம். அதற்கு, ‘எது பற்றியும் கவலைப்படாமல் நடியுங்கள். தங்கை வேடம் என்றால் கேவலம் இல்லை. அதுதான் கதைக்கு திருப்புமுனை கதாபாத்திரம் என்றால் தயங்காமல் ஏற்கலாம்’ என்று கூறியுள்ளார் ஐஸ்வர்யா.

திரையுலகில் யாருக்கும் எதற்காகவும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை என்று குறிப்பிடுபவர், நல்ல கதாபாத்திரங்களில் நடித்தால் ரசிகர்கள் கண்டிப்பாக ஆதரவு தருவார்கள் என்கிறார்.

“‘காக்கா முட்டை’ படத்தில் இரண்டு குழந்தைகளுக்குத் தாயாக நடித்தேன். அதற்கு நிறைய பாராட்டு கிடைத்தது. ஆனால், எனக்கு முன்னால் பல நடிகைகளை இயக்குநர் மணிகண்டன் அணுகிய போது, அந்த வேடத்தில் நடிக்க மாட்டேன் என்று சொல்லியிருக்கிறார்கள். பிறகு படம் வெளியானபோது, அதே நடிகைகள், இவ்வளவு சிறப்பான கதாபாத்திரத்தில் நடிக்க மறுத்துவிட்டோமே என்று புலம்பினார்கள். அதன் பிறகு சில நாயகிகள், அம்மா கதாபாத்திரத்தில் நடிக்க துணிச்சலாக முன்வந்தார்கள். அதற்கு நானும் ஒரு காரணம் என்று நினைக்கும்போது பெருமையாக இருக்கிறது. எனது 22ஆவது வயதில் அம்மாவாக நடித்தேன் என்பது பலருக்கும் தெரியும்,” என்று பெருமிதத்தோடு பேசுகிறார் ஐஸ்வர்யா.

ஒரு கதாபாத்திரத்தை எதற்காக தேர்வு செய்ய வேண்டும், அதை எப்படி அணுக வேண்டும் என்பதற்கு நடிகை ராதிகாதான் தமது வழிகாட்டி என்று குறிப்பிடுபவர், அவருடன் இரண்டு படங்களில் இணைந்து நடித்ததன் மூலம் தமது நீண்ட நாள் கனவு நிறைவேறியதாக பூரித்துப் போகிறார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!